Saturday, October 20, 2012

அபிதான சிந்தாமணியிலிருந்து - சிவன்



1. பிரம்ம தேவனை முகத்தினும், இந்திரனை தோளினும், ஏனையோரை மற்ற உறுப்புகளினும் படைத்தவர்.

2. பிரம்மன் கர்வம் கொண்ட நேரத்தில் பைரவனை ஏவி அவனது நடுத்தலையை கிள்ளியேறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தை கையிற் பற்றியவர்.

3. இந்திரன் ஒரு காலத்தில் கர்வம் கொள்ள பூத உருவம் எடுத்து அவன் முன் சென்று கோபித்து அவனுடைய கோபத்தை கடலில் விட்டார். அது குழந்தை உருவமானது. அவனுக்குப் பெயர் சலந்திரன்.

4. பார்வதி பிராட்டியார் தன் அழகை (திரி நேத்திரங்களை) மறைத்ததால் அவர் விரல்களில் உண்டாகி பெருகிய கங்கையைத் தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப சடையில் அணிந்து கொண்டார். இதனால் கங்காதரன் என்ப் பெயர் பெற்றார்.

5. ஒரு பிரவியில் பிரம்ம தேவன் தான் படைத்த குமரியை அடைய நினைத்தார். அதனால் அவள் மான் உருவம் எடுத்து ஓடினாள். பிரம்மனும் மானுருக் கொண்டு புணரச் சென்ற போது சிவன் பிரம்மனின் தலையைக் கிள்ளியவர்.  சிவனும் வேட உருவம் எடுத்து அம்பு எய்து கொன்றார். பின் பிரம்மன் மன்னிப்பு கேட்க உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர்.

6. அவந்தி நகரத்து வேதியன் தன்னைப் பெற்ற தாயைக் கூடித் தந்தையைக் கொலைபுரிந்த கொடியவன்.  அவன் முடிவில் நோயும் வறுமையும் மிகுந்து மதுரை நகரை அடைந்தானாக, அவன்பாலும் கூடல் நாயகனான சொக்கநாதப் பெருமான் கருணை கொண்டு அவன் மாபாதகம் தீர்த்தார்.

7. மதுரையில் பிறந்து வளர்ந்த தாருகவனத்து இருடிபத்னிகளை அவர்கள் ஆசைக்கிணங்க வளையலிட்டு மையல் கொண்டு புத்திரப் பேறும் அளித்தார்.

8. காம வேட்கை கொண்ட ஒரு வேதியன் ஒருவன் தாசி வீட்டிற்கு சென்று அவளை புணர்ந்தான். ஆனால் அவளுக்குத் தர பணமில்லாததால் சிவனை வேண்ட அதற்கிணங்கி தமது பதக்கத்தைத் தாசியிடம் செர உதவி செய்தார் சிவபெருமான்.

9. ஒருமுறை விஷ்ணுமூர்த்தி பாதாளத்திற்கு சென்று அங்குள்ள அப்சரஸ் தேவதைகளுடன் கூடி பல புத்திரர்களைப் பேற்றார். தம் காக்கும் தொழிலையும் மறந்தார். பிரமாதி தேவர்கள் சிவனை அணுகி காக்க வேண்டினர். உடனே சிவபெருமான் பாதாளம் சென்று விஷ்ணு புத்திரர்களுடன் போர் கொண்டு அவர்களை அழித்தார். பின் விஷ்ணுமூர்த்தியே போருக்கு வர அவரையும் கொன்று வைகுண்டத்திற்கு அனுப்பினார்.

பின் அப்சரஸ் தேவதைகள் பாதாளத்தில் இருப்பது கேட்டறிந்து மற்ற தேவர்களும் அவர்களை புணர ஆசைப்பட்டுச் சென்றனர். இதைக் கேட்ட சிவபெருமான் அப்படிச் சென்றவர்கள் உயிர் அழியும் என சாபமிட்டார்.   -  (சிவமகா புராணம்)

10. விஷ்ணுமூர்த்தியை பலமுறை சக்தியாக நினைத்து சக்தி உருவமாக பெற்று ஐயப்பனை பெற்றார்.

11. ஒருமுறை சிவன் தியானத்தில் இருக்கும் போது அவரது தேகத்தில் உண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாகியது.

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 658 - 664.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.