மாணிக்கவாசகரைப் போல யாருமே இறைவனைப் பற்றி இப்படி உருகி உருகி பாடியதாக வரலாறில்லை. எல்லா நூல்களிலும் இல்லாத சிறப்பு இந்த திருவாசகத்திற்கு உண்டு. மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
எல்லாப் பாடல்களிலும் அழுது கொண்டே பாடுகிறார். உருகுகிறார். ஏங்குகிறார். இறைவனிடம் எதையும் கேட்ட மாதிரி தெரியவில்லை. எல்லோரும் கோவிலுக்கு போனா எனக்கு அது கொடு இது கொடுன்னு கேக்குற மாதிரி இவர் எதையும் கேட்டதில்லை.
தன்னை இவ்வளவு தூரம் தாழ்த்தி, தனக்கு இறைவனை அடைய தகுதியில்லைனு இந்த பாட்டுல சொல்றாரு.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கி பொழுதினை
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே
இப்படி உருகி உருகி அழுதழுது பாடிப்பாடி இவர் சிவனாகவே மாறிவிட்டார். அதனால் திருப்பெருந்துறை கோவிலில் சிவனுக்குப் பதில் மாணிக்கவாசகர் தான் கோவில் வலம் வருவார். மாணிக்கவாசகருக்குத்தான் பூஜை.
ஜி. யு. போப் இங்கிலாந்தில் இருந்து தனது கிருத்துவ மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்திருந்தார். தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்து திருக்குறள், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
ஒருமுறை தன் மதத்தை பரப்புவதற்குப் பதில் திருவாசகம் கற்றுக் கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்ட இவரை விசாரிக்க ஒருவரை அனுப்பினர் கிருத்துவ அமைப்பினர்.
வந்தவரை உட்காரவைத்து திருவாசகத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் ஜி யு போப். இவரை ஏன் என்று கேள்வி கேக்க வந்தவர் இங்கிலாந்திற்கு திரும்ப சென்று திருவாசகத்தை படித்து விட்டு இன்னும் இந்து மதத்திற்கு மாறாமல் இருக்கிறார் என்று பெருமைப் பட்டுக்கொள்ளுங்கள் என்றாராம்.
அவ்வளவு பெருமைக்குறியது மாணிக்கவாசகர் தந்த திருவாசகம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.