Saturday, October 20, 2012

அபிதான சிந்தாமணி - விஷ்ணு


1. சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு செல்ல அவனைத் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மச்சாவதாரம் எடுத்து சூரனைக் கொன்று வேதங்களை கைப்பற்றி பிரம்மனிடம் கொடுத்தது.

2. இரணியாக்ஷன் பூமியைச் சுருட்டிச் செல்ல விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்று பூமியை தம் கொம்பில் தாங்கி வந்து முன்போல் நிறுத்தியவர்.

3. கூர்மவதாரம் எடுத்து பாற்கடல் கடைகையில் மந்திரமசையாது நிற்கத் தம் முதுகில் தாங்கியவர்.

4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர்.

5. வாமன அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடிமண் யாசித்து அவந்தர உலகமெல்லாம் ஈரடி மண்ணால் அளந்து ஓரடிக்கு இடம்

பெறாததால் அவன் தலையில் தன் கால் பதித்து பாதாளத்தில் அழுத்தி தேவர் பயம் போக்கியவர்.

6. புத்தாவதாரங்கொண்டு நாரதரை மாணுக்கராயுடன் கொண்டு சென்ற திரிபுராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர்.

7. பரசுராமாவதாரத்தில் சமதக்னிக்குக் குமாரராய் அவதரித்து சூரிய வம்ச நாசஞ் செய்தவர்.

8. இராமாவதாரம் எடுத்து இராவண கும்பகர்ணாதியரை வதைத்து சீதையை சிறைமீட்டுத் தேவர்களின் இடுக்கண் போக்கியவர்.

9. பலராமாவதாரம் எடுத்து தேவகாசுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.