Thursday, October 25, 2012

சீதா பிராட்டியார்


சீதா பூர்வ ஜென்மத்தில் வேதம் ஓதிக் கொண்டிருந்த குசத்துவர் வாயில் தோன்றி வேதவதி என்ற பெயருடன் வளர்ந்து கொண்டு இருந்தாள். தம்பன் என்னும் அரக்கன் இவளை மனைவியாக்க வேண்டி இருடியைக் கேட்டான். அதற்கு இருடி இவள் விஷ்ணுவுக்கு மனைவி அதனால் அனுமதிக்க மாட்டேன் என்றாள். கோபம் கொண்ட அரக்கன் இருடியைக் கொன்றான்.

வேதவதி தனித்து விடப்பட்ட நிலையில் அவள் விஷ்ணுவை அடைவதற்க்காக அவரை நினைத்து தவம் செய்தாள்.  அங்கே வந்த இராவணன் இவளை அடைய முற்பட்டு மிக வலிமையுடன் இவள் கரம் பிடித்தான்.  உடனே வேதவதி நீ தீண்டிய இந்த உடல் இனிமேல் இருக்கக் கூடாது, உன் அரசை அழிப்பேன் என்று சாபமிட்டு தீக்குளித்தாள்.

பின் இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் பிறந்தாள். அங்கே பூஜைக்காக மலர்களை பறிக்க வந்த இராவணன் இக்குழந்தையை எடுத்துச் சென்றான்.  இதைக்கேட்ட சோதிடர் இக்குழந்தை இங்கு இருந்தாள் இந்த அரசை அழித்து விடுவாள் என்று சொல்ல, இராவணன் வேறுவழியில்லாமல் ஒரு பெட்டியில் வைத்து கடலில் விட்டான். அது வெள்ளத்தில் புரண்டு மிதிலையை வந்தடைந்தது. அந்த நேரத்தில் சனகன் யாகம் செய்து கலப்பையை எடுத்து உழும்போது பெட்டி தட்டுப்பட்டது. அதை திறக்க குழந்தையைக் கண்டு மகிழ்ந்தான்.

வளர்ந்த சீதையை ஒரு சுயம்வரத்தில் இராமன் வில்லை உடைத்து மணந்து கொண்டான்.

மீதிக்கதை தெரிந்ததே. அபிதான சிந்தாமணியிலிருந்து எடுத்தது. பக்கம் 673,674.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.