Friday, October 19, 2012

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சை யூனியைந்த வேற்படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழூகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

எங்கிருந்து வந்தான் இந்த பாரதி ? எப்படி அவனுக்கு இவ்வளவு தைரியம் ?
பயந்து பயந்து வாழும் மனிதரைப் பார்த்து இப்படி பாடுகிறான் பாரதி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.