இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான உணவை உட்கொள்ளும் போது ஏழு தாதுக்களான ரசம், ரத்தம், மஜ்ஜை, எலும்பு, கொழுப்புதசை, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து என்று இறையாற்றலாக மாறும் தன்மை கொண்ட இந்த உடம்பா நான் ? இல்லை.
ஐம்பொறிகளான பார்த்தல், கேட்டல், நுகர்தல், ருசித்தல், உணர்தல் என்ற உணர்ச்சிகளால் ஆன ஒன்றா நான் ? இல்லை.
இந்த ஐம்பொறிகளைக் கொண்டுள்ள உடல் உறுப்புகளான கண், காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல்களால் ஆன ஒன்றா நான் ? இல்லை.
இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை நம் உடலின் கட்டமைப்பிற்கு தேவைகேற்ப சீரான முறையில் வெவ்வேறு விகிதங்களில் அமைந்துள்ள ஒன்றா நான் ? இல்லை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்த சரீரம் இயங்குவதற்கும் வாழ்வதற்கும் தேவைப்படும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற ஐந்து வாயுக்களால் ஆனா ஒன்றா நான் ? இல்லை.
வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் சேர்த்து வைத்து அவ்வப்போது நினைக்கின்ற மனசா நான் ? இல்லை.
இங்கு சொன்ன அனைத்துமே ஒன்றாக செர்ந்ததா நான் ? இல்லை.
அப்போ நான் யார் ?
இங்கு சொன்ன அனைத்திலிருந்தும் தனித்து இருப்பதும், இயற்கை எழில் கொஞ்சும் இவ்வுலகில் பிறந்ததில் இருந்து இன்று வரை கிடைத்தவற்றால் உணர்ந்ததும்
இந்த பிரபஞ்சத்தில் இருந்து கற்றுக் கொண்டதுமான அறிவுதான் நான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.