Tuesday, October 2, 2012

நல்ல அம்மா

ஒரு குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியது. உள்ளே வந்ததும் அம்மா குழந்தையிடம் இன்று என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறாள்.

அதற்கு குழந்தை பெரிய ஆளான பின் என்னவாகப் போறீங்கன்னு ஆசிரியர் கேட்டாங்க. அதுக்கு சிலர் மருத்துவராகனும், வக்கீலாகனும், பொறியிலாளராகனும்னு சொன்னாங்க.

அம்மா அதுக்கு நீ என்ன பதில் சொன்னாய் என்று கேட்டாள்

குழந்தை நான் குதிரையோட்டிகானும்னு சொன்னது.

அம்மா கோபப் படாமல் ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்டாள்.

அதற்கு குழந்தையோ தினமும் நான் அந்த மாமாவோட குதிரை வண்டியிலதான் பள்ளிக்கு போறேன். அந்த மாமா ரொம்ப நல்ல குதிரை ஓட்டுவாங்க என்றது. எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது.

அம்மா உடனே உள்ளே சென்று தேரோட்டும் கிருஷ்ணர் படத்தை கொண்டுவந்து குழந்தையிடம் காமித்து உனக்கு குதிரையோட்டி ஆகனும்னா இந்த மாதிரி ஆகனும்னு சொன்னாள்.

அந்த குழந்தை தான் விவேகானந்தர்.

ஒரு குழந்தை என்னவாகனும்னு நினைக்கிறதோ அதன் வழியில் சென்று அவர்களுக்கு வழிகாட்டியா இருக்கனும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.