Wednesday, December 19, 2012

விஷ்ணுவின் மச்ச அவதாரம்

விஷ்ணு புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் அவதாரங்களில் முதலாவதாக வருவது மச்ச அவதாரம். இது மீனைக் குறிக்கிறது.

ஏன் மீன் அவதாரம் முதலில் ? ஏன் வேறு எதாவது அவதாரமாக இல்லை ?

ஒரு மீன் வந்து தன்னைவிட பெரிய மீனிடம் இருந்து காப்பாற்றுமாறு மனுவிடம் கேட்டது.  மனுவும் கடலில் இருந்து அந்த மீனை எடுத்து ஒரு சிறிய பானையில் இட்டார். நாளாக நாளாக மீன் தன் அளவில் பெரியதாக வளர ஆரம்பித்தது. இதனால் பெரிய பானை தேவைப்பட மனுவும் அந்த மீனை எடுத்து பெரிய பானையில் இட்டார்.

இங்கே இயற்கையை தடுத்து மீனைக் காக்க வேண்டிய நிலையில் மனு கலாச்சாரம் என்ற பெயரில் பானையில் இட்டார். ஒவ்வொரு முறையும் மீன் வளர மீனைவிட பெரிய அளவில் பானை தேவைப்படும். ஆக ஏதோ ஒரு உயிர் வாழ ஒரு உயிர் அழியும். இதுதான் இயற்கை. இயற்கையை தடுத்தால் அதனால் வரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.


புத்தன்


இது புத்தன் சொன்ன வார்த்தைகள்.

ஒருவன் நிறைய கற்றுக்கொண்டு தன்னைவிட அதிகம் கற்றுக்கொண்டவர்கள் இல்லை என்று கர்வத்தோடு இருந்தான். புத்தரைப் பற்றி கேள்விப்பட்டு புத்தரிடம் வந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எனக்கும் கற்றுத்தாருங்கள் என்றான். புத்தரும் சரியெனச் சொல்லி தான் போகும் இடமெல்லாம் அவனையும் அழைத்து சென்றார்.

சில வருடங்கள் ஆன பின் இன்றுவரை இவர் நமக்கு எதுவும் சொல்லித்தரவில்லையே, தனக்கு தெரிந்ததைவிட இவருக்கு ஒன்றும் தெரியாதோ என நினைத்தான்.

ஒரு நாள் புத்தரிடம் வந்து தான் விடைபெறுவதாகவும் தனக்கு கற்றுக்கொள்ள இங்கு எதுவும் இல்லையென்றும் கூறினான். புத்தரும் அப்படியே ஆகட்டும் என்று கூறனார். இவனும் பல யோசனையுடன் புத்தரைப் பார்த்து எதாவது தாங்கள் சொல்ல விரும்புகிறீர்களா என்றான்.

அதற்கு புத்தர் நீ என்னிடம் வரும்போது எல்லாம் கற்றுக்கொண்டுவிட்டோம் இனிமேல் என்ன கற்றுக்கொள்ள இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தாய். இன்றுவரை அப்படிதான் இருக்கிறாய்.  அதனால் தான் இவ்வளவு வருடம் என்னிடம் இருந்து எதுவும் நீ கற்றுக்கொள்ளவில்லை.

இவன் புத்தரைப் புரிந்து கொண்டான். தன் கர்வத்தையும் தொலைத்தான்.

Measure

How to measure ? When to measure ? What to measure ?

Can everything be measured?  Emotions cannot be measured always.

A father wants to measure his two daughters how much they loved him. The elder daughter told she loves him as much as sugar. The younger daughter told him she loves as much as salt. Fathers perspective he thought elder daughter loves him more. He gave higher rating for sugar. So he rejected the younger daughter.
But younger daughter's perspective she loves father the most because you cannot eat anything unless it contains salt.

There are two types of measurement. Objective and Subjective reality measurement.

In mythology, Narathar came to mount kailaya mountain with one mango and said those who run fast around the world 3 times he will offer the mango. Vinayaka and Muruga agreed for the race and muruga went around the world in his peacock. Ganesha thought few times and went around his parents and got the mango. Murugan asked how its possible. So ganesha replied you went around "The world", i went around "My world". what matters more?

This is the difference between objective reality and subjective reality. In this story Muruga represents objective and Ganesha represents Subjective reality.

So always when we measure, we are focused only on objective reality. We totally forgets subjective reality.  Subjective reality cannot be measured examples like taste, instinct.

A king called Mahabali and he will give everything whoever asked. One day vishnu came and asked for three pieces of land. The king agreed as he asks for only 3 foot land. Soon Vishnu shows his real strength and takes viswaroopam and 2 peices of land vishnu covers heaven and earth. Then asked Mahabali where to keep my 3rd foot. Mahabali says keep it on my head. Vishnu did and crushed him to earth.

Kings perception its only 3 foot land. But Vishnu took the gigantic figure and crushed him. So always the measurement is based on each person perception.

How to we measure happiness ?

Happines is combination of something that can be measurable.

Lakshmi     : Material Tangible Wealth ( Measurable )
Saraswathi : Intellectual Wealth ( Partially measurable )
Durga        : Emotional Wealth ( Cannot measureable ) 

One day Indra wants to measure how great he was. He wants to show his power to the  entire world and he asked Viswakarma to build very big palace with gold. Indra came and looked at the palace and thought its not enough. Then he asked him to build a palace with jewels which will show my true worth. Viswakarma built another palace which is bigger than previous. Now indra comes and still thought its not enough.

Viswakarma exhausted and he goes to vishnu for help. Vishnu comes to Indra as little boy and asked to see the palace. Indra showed his 2 palace built by Viswakarma.

The little boy said i have seen many Indra's and their palace better than yours and smaller than yours.  Now Indra asked the little boy how many indras do you know ?

Here is the measurement scale is different from each one. 

Teacher

Don't give man a fish.
Don't teach him how to fish either.
But inspire him to find his own method of fishing.

If you do, you are a teacher.
If he do, it a growth.

Tuesday, December 18, 2012

இராமாயணத்தில் சந்தேகம்


இராமாயணம் நடந்தது திரேதாயுகத்தில் என்று சொல்கிறார்கள். இது திரேதாயுகம்,துவாபரயுகம் முடிந்து இப்போ கலியுகம் நடக்கிறது என்று வைத்துக்கொண்டால் இராமாயணம் முடிந்து 2160000 (1296000+864000) ஆண்டுகள் ஆகிறது.

புத்தன் பிறந்து 2500 ஆண்டுகளே ஆன நிலையில் அவரைப் பற்றி இராமயணத்தில் எப்படி செய்தி சொல்லியிருக்க முடியும் ? எங்கேயோ இடிக்கிறது ?




இதில் ராமனின் தங்கை சீதை என்று ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீநிவாச அய்யங்கார் என்னத்தையாவது எழுதிட்டுப் போயிட்டாரோ ?


Monday, December 10, 2012

கடவுளாகலாம்

இந்த உலகில் நிறைய மக்கள் கோவில் கட்டினால் புண்ணியம் என்று நினைக்கிறார்கள். கல், மண், சாந்து, இரும்பு கொண்டு கோவில் கட்டுகிறார்கள். அதற்கு தானம் செய்யுங்கள் எனக் கேட்கும் போது தரமறுத்தால் என்னங்க சாமிக்கு கோவில் கட்டுகிறோம் உதவ மாட்டேன்னு சொல்றீங்க என்பர்.

இந்த உலகில் கல்லையும் மண்ணையும் கடவுளாக்குவது வெகு சுலபம். கல்லால் தான் கடவுள் சிற்பம் வைத்திருக்கிறார்கள்.

கல்லை கடவுளாக்க இவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஏன் ஒரு மனிதனை கடவுளாக பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்னு தெரில.

சிறந்த சிந்தனை, சிறந்த வாழ்க்கை, சிறந்த எண்ணங்கள், சிறந்த செயல்பாடு என்று இந்த சமுதாயத்திற்கு தேவையானவற்றை ஒவ்வொரு மனிதனும் மேற்கொண்டால் கடவுளாகலாம்.

அனுபவங்களை பகிர்தல்

ஒருவன் கடவுளை முழுமையாக நம்புகிறான். அவனிடம் கடவுள் இல்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் இவ்வளவு நாளாக கடவுள் இருக்கிறார் என்று நம்பி வழிபட்டிருக்கிறான். அதன் நல்வழி கடைபிடித்திருக்கிறான்.

ஒத்துக் கொண்டுவிட்டால் இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்தது போலாகிவிடும்.

அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்பவனிடம் போய் இதுதான் கடவுள் இப்படி வழிபடனும்னு சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான்.

இவனும் யோசிப்பான் இவ்வளவு நாளா முட்டாளா இருந்தோம்னு சொல்லிருவாங்களோன்னு ஒத்துக்கொள்ள மாட்டான்.

அதனால் ஒருவன் தன் கருத்துக்களை மற்றவர்களிடம் திணிப்பதை விட்டுவிட்டு அவரவர் அனுபவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு அவர்களையே அனுபவித்து புரிந்துகொள்ள வழிவகுத்தால் நன்றாக இருக்கும்.

ஒழுக்கமாக வாழ்வது

ஒருவன் தன் தந்தை இறந்து விட்டதால் அவரை மோட்சத்திற்கு அனுப்ப எண்ணினான். இவன் தந்தை மிகவும் மோசமான ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன்.

எத்தனையோ சாஸ்திரிகளையும் மந்திரம் ஓதும் மாந்திரீகர்களையும் அழைத்து வந்து பூஜை செய்தான்.

இதிலும் திருப்தி அடையாதவன் புத்தரை அணுகி தன் தந்தையை மொட்சத்திற்கு அனுப்ப உதவுமாறு வேண்டினான்.

புத்தரோ இரண்டு மண்பானையும், கருங்கல்லும், வெண்ணையும் கொண்டு வா என்றார். ஒரு பானையில் கல்லும், இன்னொன்றில் வெண்ணெயும் போட்டு இந்த குளத்தில் போடச் சொன்னார்.

இவ்வளவு எளிதான விசயமா என்று எண்ணியவன் அவ்வாறே செய்தான். பின் புத்தர் மண்பானையை உடைக்குமாறு சொல்ல அதையும் செய்தான். கல் கீழே செல்ல வெண்ணெய் மேலேயே நின்றது.

இப்போ கல்லே மேலே வா, வெண்ணெயே கீழே போ என்று புத்தர் சொல்லச் சொன்னார். இவன் தனக்குள் புத்தரை பெரிய மகான் என்று நினைத்தோமே இவருக்கு இது கூடவா தெரியாது என்று
நினைத்தவன் புத்தரிடம் கல் எப்படி மேலே வரும் எனக் கேட்டான்.

அதற்கு புத்தர் கேட்டார் இவ்வளவு தெரிந்த நீ உன் தந்தை மட்டும் எப்படி மேலே மோட்சம் செல்வார் ? எவனோ ஒருவன் எதோ மந்திரம் சொன்னா மோட்சம் கிடைக்கும்னு எப்படி நினைத்தாய் ?

இவனுக்கு தெளிவு வந்தது.

ஒழுக்கமாக வாழ்வதுதான் சிறந்தது என்பதை புத்தர் விளக்கினார்.

பெருமை


பசு தன் பால் அளவை மடியில் மறைப்பது போல்,
வழிப்போக்கன் பணத்தை மடியில் மறைப்பது போல்,
உழவன் விதையிட்டு மண்ணால் மூடி மறைப்பது போல்,
நற்செயலால் உனக்கு வரும் பெருமையை மூடி மறை.

Sunday, December 9, 2012

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்


திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் பாஞ்சாலியை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. இருவரும் நிறைய விஷயங்கள் பேசியபின், கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் பேசி மகிழ்ந்தார்கள். அப்போது பாஞ்சாலியைப் பார்த்து ஐவருக்கு தேவியாய் எப்படி வாழ்ந்தாய் என ஆண்டாள் கேட்க அதற்கு பாஞ்சாலியின் மனம் சற்றே புண்பட்டது.

ஆண்டாளை நோக்கி ஐவருக்கு தேவி என்று என்னை ஏளனப் படுத்தினாயே நீயும் ஐவரை மணந்து கொள்வாய் என்றாள். பின் பெருமாளை வேண்டி அவனையே அடைய வேண்டும் என விரும்பி ஆண்டாள் தவமிருந்தாள். பாஞ்சாலி இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள், அதனால் அவள் வாக்கு பொய்யாகக் கூடாது என்பதால் ஐவரை மணந்தாள் ஆண்டாள்.

அரங்கன், ஸ்ரீரங்கம்
வடபத்ரசாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்
வடமலைவாளன், திருப்பதி
சோலைமலை அழகன், மதுரை
செண்டலங்காரன், மன்னார்குடி


ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இந்த தகவல் உள்ளது.

"அரங்கன் முதல் பாரில் ஐவரை எய்துவான்
ஐந்துவயதில் பிஞ்சாய்ப் பழுத்த பெண் அமுதம்"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்
சிற்றிலை இழைத்தருள்கவே"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் விருந்து உண்ணச்
சிறுசொறு இழைத்தருள்கவே"

"அரங்கேசன் முதலாம் முதல் ஐவரும் மகிழவே
பாமாலை அருளும் புத்தூர் மடந்தை"


இன்றும் ஆண்டாள் அணிந்த மாலையை மேற்சொன்ன கோவிலுக்கு அனுப்புகிறார்கள்.

- மகாபாரதக் கதைகள், த கோவேந்தன்.

Wednesday, December 5, 2012

சு.அறிவுக்கரசு

இந்தியர் மற்றும் அய்ரோப்பியரிடையே இருந்த இனத்தொடர்புகள் பற்றிய கருத்துகள் உண்மையோ இல்லையோ, இந்திய அய்ரோப்பிய மொழிகளுக் கான மூலம் ஒன்றுதான் என்பதிலோ அவற்றின் சிந்தனை ஒற்றுமையானது என்பதிலோ எவ்வித அய்யமும் இல்லை. மிகப் பழமையான இந்தோ அய்ரோப்பிய இலக்கியச் சின்னமாகவும் தத்துவச் சின்னமாகவும் இலங்குவது ரிக் வேதம் ஆகும் என்றுதான் சர்வபள்ளி இராதாகிருட்டி ணனும் சார்லஸ் ஏ. மூர் என்பவரும் சேர்ந்து எழுதிய இந்தியத் தத்துவத்திற்கான தரவு நூல் (A SOURCE BOOK IN INDIAN PHILOSOPHY) எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே வேதங்கள் ஆரியர்க்கு மட்டும் உரியவை அன்று. மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மேய்ச்சல் நிலங்களைத் தேடித் தமது மாடுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களும் அவர்களின் பூர்வ சொந்தக்காரர்கள் ஆன வெள்ளையர்களும் சேர்ந்து படைத்து இந்தியர்களுக்குப் படைத்தவை ஆகும்.

இந்தோ ஆரியர்களின் பிற்கால நடவடிக்கைகள், தத்துவங்களைப் புரிந்துகொள்ள வகையேற்படுத் திடும் ஆதாரங்கள் வேதங்கள் என்று பிசிறில்லாமல் மேற்படி நூல் கூறுகிறது. எனவே, இந்தியத் தத்துவம் என்பது வேதங்களில் கூறப்படுபவை எனக் கூறமுடியாது. அது ஆரியர்களுடைய தத்துவம் என்றே கூறலாம்.
அப்படியானால், இந்தியத் தத்துவம் என்பது எது? இந்துத் தத்துவம் என்கிறார்களே, அது எது? இந்தியத் தத்துவமும் இந்துத் தத்துவமும் ஒன்றா?
இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்தியா என்பது எது? இந்தியர் என்பது ஏது? இந்து(மதம்) என்பது எது? இந்துக்கள் என்போர் யார்?
இவைகளுக்கான விடைகள் நீளமானவை. நெடுங்காலமாகவே தந்தை பெரியார் அவர்களால் விளக்கப்பட்டுத் தென்னக மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்டவை. இந்து என்ற சொல்லே, இந்திய மொழிகள் எதிலும் இல்லை. ஆதியில் இல்லாத இச்சொல், பாதியில் நுழைந்தது; நுழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களைக் குறிப்பிடுவதற்காகக் கையாண்ட சொல். பொது ஆண்டு 1799இல் சர்.வில்லியம் ஜோன்ஸ் எனும் கவர்னர் ஜெனரல் பயன்படுத்தத் தொடங்கிய சொல். செத்துப்போன சங்கராச்சாரி சாமிநாதன் கூறியவாறு பெயரில்லாத மதத்திற்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் இந்து என்பது. பாரசீக மொழியில் மட்டுமே உள்ள சொல். சிந்து என்பதை ஹிந்து என்றுதான் அம்மொழியில் எழுதமுடியும்.
ஏனென்றால், ச அம்மொழியில் கிடையாது. அதற்குப்பதில் ஹ பயன்படுத்துவார்கள். அதுபோலவே சமக்கிருதத்தில் வ கிடையாது. பதிலாக ப பயன்படுத்துவார்கள். வங்காளி என்பதற்குப் பதில் பங்காளி என்றுதான் சமக்கிருதத்தில் எழுதமுடியும். தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் பெயரை பைத்தியநாதன் என்றுதான் எழுத முடியும். மொழியின் குறை அது!
அடுத்து இந்தியா என்றொரு நாடு இருந்ததா? வேத காலத்தில் இருந்ததா? புராண காலத்தில் இருந்ததா? முகலாயர் காலத்தில் இருந்ததா? வெள்ளையர் காலத்தில் இருந்ததா? வெள்ளையர் வெளியேறிய போதாவது இருந்ததா? இல்லையே!
வேத காலத்தில் காந்தாரம் (கந்தஹார்) ஆப்கானிஸ்தான் முதல் கூர்ஜரம், வங்கம், கலிங்கம், திராவிடம் என்று 56 தேசங்கள்தான் இருந்தன. இதற்கு ஆதாரமாக மகாபாரதம் வனபருவத்தில் வருணிக்கப்படும் ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற நாட்டவர்களின் பட்டியல் உள்ளது. புராண காலத்தில் மனுதர்மம் எழுதப்பட்டபோதுகூட, மன்னர்களின் பெயர்களைக் குறிக்கும்போது, அங்கர், வங்கர், திராவிடர் என்றுதான் பட்டியல் நீள்கின்றது. எனவே 56 தனித் தனி நாடுகள்தான்.
முகலாயர் காலத்திலும்கூட, இன்றைய இந்திய நாட்டின் வடபகுதிதான் அவர்களிடம் இருந்தது. மராட்டியம் தனிதான். திராவிடம் மூன்றாக சேர, சோழ, பாண்டியர்களிடம் இருந்தது.
வெள்ளையர் ஆளத் தொடங்கியபோதும் முடிக்கும்போதும்கூட, பிரிட்டிஷ் இந்தியாவும் 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களும் இந்நிலப்பகுதியில் இருந்தன. நாட்டைவிட்டு வெளியேறும்போது, பிரிட்டிஷ் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கொடுத்துவிட்டுப் போயினர். 500க்கும் மேற்பட்ட மன்னர்களின் நாடுகள் தனித் தனியாகவேதான் இருந்தன.
1947 ஆகஸ்டு 15க்குப் பிறகுதான் மைசூர், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, அய்தராபாத், குவாலியர், ஜெய்பூர், உதய்பூர், போபால் போன்ற மன்னர்கள் ஆண்ட பகுதிகள் இணைக்கப்பட்டு இந்தியா உருவாக்கப்பட்டது.
ஆகவே, இந்து மரபும், இந்திய மரபும் முறையே 210 ஆண்டும் 66 ஆண்டும் ஆயுள் கொண்டவை மட்டுமே.
தமிழ்நாட்டின் கபிலர் என்பவரால் கற்பிக்கப்பட்ட சாங்கியம், யோகம், மீமாம்சம், ஞாயம், வைசேஷிகம் ஆகியவை இந்திய தத்துவ மரபுகள் எனக் கூறப்படுகின்றன. இவற்றுடன் வேதாந்தம் என்ற ஒன்றையும் சேர்க்கிறார்கள்.
வேதம் + அந்தம், அந்தம் என்றால் முடிவு எனப் பொருள். வேதத்தில் முடிவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
முடிவு என்றால் END என எடுத்துக் கொள்ளக் கூடாது. ESSENCE (பிழிவு) என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதிலேகூட, இவர்கள் 4 வேதங்களையோ, ஆரண்யகங்களையோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உபநிடதங்களை மட்டுமே கணக்கிலும் கருத்திலும் கொள்கிறார்கள். ரிக் வேதத்தை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். இதில் முதல் பகுதி சம்ஹிதை எனப்படும் போற்றிப் பாடல்கள். அடுத்த பகுதி பிராமணம் எனும் சடங்கு, சம்பிரதாயங்களை விளக்கும் பகுதி.
அடுத்தது ஆரண்யகம் எனும் காட்டுப் பாடல்கள் அடங்கியது. உபநிடதங்கள் என்பவை இப்பகுதியில்தான் இருக்கின்றன.
இவை மூன்றும் ஒரே காலத்தில் கூறப்பட்டவையோ, தொகுக்கப்பட்டவையோ அன்று. சம்ஹிதை காலத்தால் மூத்தது. பாலகங்காதரதிலக் எனும் மராத்திப் பார்ப்பனர் இவை 6500 ஆண்டுகளுக்கு முன்பே சார்ந்தவை எனப் பொய்க் கூற்று கூறியுள்ளார். ஆந்திரப் பார்ப்பனரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இதனை ஏற்க மறுத்துள்ளார்.
அவர் எழுதிய இந்தியத் தத்துவம் (INDIAN PHILOSOPHY) எனும் நூலில் இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்றே நாம் கணிக்கிறோம் என்றே குறித்துள்ளார். யாரைப் பார்த்தாலும், வேதம் 4000 ஆண்டுகாலப் பழமையானது என்பார்கள். அது உண்மையா?
நான்கு வேதங்களில் கடைசியாகக் கூறப்படும் வேதம் அதர்வண வேதம் என்பது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று வேதங்களை வரிசைப்படுத்துவார்கள். அதில் அதர்வண வேதத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள், மந்திர, தந்திரங்கள் போன்ற பித்தலாட்டங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் கற்பூரம் கொளுத்துவது எப்படி என்பது பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது. கற்பூரம் என்பது மணம்தரும் ஒரு தாவரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெ யிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணிறப் பொருள். இது எளிதில் தீப்பிடிக்கும்; விரைவில் ஆவியாகிக் கரைந்துபோகும். இது கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில். இது கண்டுபிடிக் கப்பட்டு 1220 ஆண்டுகள்தான் ஆகின்றன. அங்கிருந்து இந்திய நாட்டுக்கு வந்து சுமார் 1000 ஆண்டுகள் இருக்கலாம்.
1000 ஆண்டே ஆன பொருள் 6500/3500 ஆண்டு களுக்கு முந்திய வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது என்றால்... கற்பூரத்திற்கு ஆதாரம் உள்ளது. வேதத்திற்கு ஆரியர்களின் அளப்பு மட்டுமே இருக்கிறது.  ரிக் வேதத்திலே, கோவையான பாடல்கள் அமைந்திருக்கவில்லை. பல மலர்களின் சேர்க்கை யைக் கதம்பம் என்று கூறுவது போன்ற கலவைப் பாடல்கள் கொண்டது ரிக்வேதம். அறிவுக்குப் பொருந்தாதவை நிறைய உள்ளன. அறிவுக்குப் பொருந்தி வரக்கூடிய பாடல்களும் சிலபல உள்ளன.
அவற்றை திராவிட ரிக் என்கிறார்கள். திராவிடர்களின் சிந்தனைப் பிழிவை எடுத்துப் போட்டு, நாணயமாகத் திராவிட ரிக் எனக் குறித்து ரிக் வேதத்தைத் தயார் செய்திருக்கிறார்கள். எழுதாமல், வாய் மொழியாக மனப்பாடம் செய்து ஒப்புவித்து (தப்பும் தவறுமாய் சொல்வதற்கும் வாய்ப்பு உண்டல்லவா!) எழுதாக்கிளவி, மறைபொருள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் (ஜெர்மனியின் மாக்ஸ்முல்லர் போன்றோர்) அதனை முடிந்தவரை விளங்கி மொழிபெயர்த்து உலகுக்குக் காட்டிய பின்னர்தான் அது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆரியர்களின் எதிரிகளை எதிர்க்கவும், அழிக்கவும் போரிடுவதற்கும் போரில் உதவுவதற்கும் பிறரின் உதவியை, ஒத்தாசையை நாடிப் பெறுவதற்கான பாடல்கள் கொண்டது யஜுர் வேதம். சாமவேதம் என்பது காமச்சுவை ததும்பும் இசைப்பாடல்களின் தொகுப்பு. வாத்ஸ்யாயன் என்பவர் காமசூத்ரா எழுதுவதற்கான தரவு நூல் சாமவேதம் என்றே சொல்லலாம். அதர்வண வேதம் அயோக்கியத்தனமான சடங்காச்சாரங்கள், வழிமுறைகள், மந்திர தந்திரப் பிரயோகங்கள் போன்றவற்றை விளக்கமாகக் கூறும் வேதம். எதையும் கையாண்டு எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆரியர்களின் வாழ்வுமுறைக்கு வழிகூறிடவும், பிறரை ஏமாற்றுவதற்கான உபாயங்களைக் கூறிடவும் அவர்களுக்கான வாழும் வழி வகைகளை வகுத்திட்ட வேதம்.
சம்ஹிதைகளின் சங்கதி இப்படி என்றால் இரண்டாம் பாகமான ஆரண்யகம் வனப்பாடல்கள் என்று பொருள்படும். இந்த உலகம் எதிலிருந்து வந்தது?- இந்த உயிர்கள் எங்கிருந்து வந்தன? எங்கே போகின்றன? இறந்த பின் இருக்கப்போகும் நிலை என்ன? இப்படியெல்லாம் கேள்விகள் நிறைந்த பகுதி. விடை இல்லாக் கேள்விகள்; விடை தெரியாக் கேள்விகள். இத்தகையக் கேள்விகளால் என்ன பயன்? ஒன்றும் கிடையாது.
அடுத்தது உபநிஷத்கள். மொத்தம் 108 உள்ளன. இவற்றில் 18 உபநிஷத்துகள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதிக் கொள்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து. அல்லா உபநிஷத் என்றே ஒன்றை எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அல்லா எனும் அரபிச் சொல் கடவுள் என்பதைக் குறிப்பதாகக் கூறி அதனை வணங்கவேண்டும் என்கிற மார்க்கம் உருவாக்கப்பட்டு 1433 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் 6500/3500 ஆண்டுகளான வேத, உபநிஷத்துகளில் ஒன்று என்றால்... இந்தப் புளுகு கந்த புராணத்தில் கூட இல்லை என்பதாகத்தானே இருக்கிறது?
தத்துவம் எனப்படுவது வாழ்க்கைப் பெருமை. வாழ்க்கை நெறி. சிறந்த வாழ்வுக்கான சிந்தனைகளின் முடிவு. செம்மையான வாழ்வின் அடிப்படைச் சிந்தனைத் தெளிவு. அச்சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் ஊக்கம். அப்படிப்பட்ட தத்துவம் மக்களின் அன்றாட வாழ்வின் அடிப்படைகள்பற்றிக் கவலைப்பட்டுக் கருத்து தெரிவிப்பதாக அமைந்திட வேண்டும். சாக்குருவி கருத்துகளைக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு என்ன என்ற வினாவுக்கு விடை அளிப்பதாக இருக்கவேண்டும். இதற்குப் பிறகு என்ன என்கிற சாக்குருவி வேதாந்தம் மனித வாழ்க்கைக்குப் பயன்படாது. அப்படிப் பயன்படாத தத்துவம் தேவையேயில்லை. வேதங்களின் அடிப்படையிலான தத்துவம் இந்து தத்துவம் எனலாமே தவிர இந்தியத் தத்துவம் என்பதை ஏற்க முடியாது.
இந்த உபநிஷத்களுக்கு காலடியில், ஆர்யாம்பாள் எனும் விதவைப் பெண்ணுக்குப் பிறந்த (ஆதி) சங்கரன் எனும் பார்ப்பனர் பஜகோவிந்தம் எழுதியிருக்கிறார், வையாகர்ணி ஸ்பண்டித வைஷ்ய (பண்டிதர்களுக்காக இந்தப் பாட்டை எழுதுகிறேன்) என்ற முன்னுரையோடு எழுதியிருக்கிறார். பஜகோவிந்தத்தில் 12 பாடல்கள் உள்ளன. துவாதச மஞ்சரி காரிர தெக்ஷ் என்கிறார். இந்த நூலின் பெயர் துவாதச மஞ்சரிகாரி என்பதாகும். துவாதச என்றால் பன்னிரண்டு என்று பொருள். தமிழில் பத்து, இரண்டு பன்னிரண்டு என்கிறோம். ஆரியர்களின் சமக்கிருதத்தில் இரண்டு பத்து _ (பன்னிரண்டு) துவாதச என்கிறார்கள். நம் வழக்குப்படி இரண்டு பத்து என்றால் இருபது என ஆகும். இப்படிப் பல நேர்வுகளில் நமக்கும் அவர்களுக்கும் நேர் விரோதம். அவர்களின் தத்துவமும் அப்படியே!
நான்கு வேதம் என்றவர்கள், ஆறு சாத்திரம் என்கிறார்கள். ஆனால் அய்ந்தை மட்டுமே பட்டியல் போடுகிறார்கள். சாணக்கியன் எனும் கவுடில்யனின் அர்த்த சாத்திரம் கொடுங்கோல் மன்னர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்கும் விபரீத சாத்திரம். எப்படி ஏமாற்றுவது, எப்படி வரி விதிப்பது, எப்படித் துரோகம் இழைப்பது, எப்படி காசுக்கு விலைபோகும் விபசாரிகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு இரகசியங்களைத் தெரிந்து கொள்வது போன்ற பித்தலாட்ட ஆட்சிமுறைகளைக் கற்றுத் தரும் சாத்திரம். இத்தாலியின் மாக்கியவல்லி எழுதிய தி பிரின்ஸ் எனும் மோசடி கற்றுத் தரும் நூலுக்கே தந்தை எனக் கருதப்படும் சாத்திரம்.


இரண்டாவதாக மனுசாத்திரம். இதை எழுதியது ஓர் ஆளா, அல்லது பலரா என்பதே விளங்காமல் உள்ள சாத்திரம். உள்ளடக்-கத்தைப் படித்தால் ஒரே காலத்தில் எழுதப்-பட்டது அல்ல என்பது மட்டும் புரியும். மனிதர்கள் பிறக்கும்போதே நான்கு பிரிவுகளாக ஏற்றத் தாழ்வுகள் உள்ளவர்களாகப் பிறப்பிக்கப்-பட்டுள்ளனர் எனும் சமூக அநீதியைக் கற்பிக்கும் சாத்திரம். ரிக் வேதத்தில் புருஷசூக்தம் எனும் பிரிவுகளில் உள்ளவையே இதிலும் உள்ளது. இவை இரண்டிலும் உள்ள பாகுபாடுகளே பகவத் கீதையிலும் இடம் பெற்றுள்ளன என்பதைப் பார்க்கும்போது பலவகையிலும் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் தெரியவரும்.
மூன்றாவதாக காமசாத்திரம். காம சூத்ரம் என்றும் கூறுவார்கள். வாத்ஸ்யாயனன் என்பான் எழுதியது. உலகுக்கே இது பற்றிய முதல் நூல் இதுதான் என்று மேலை நாட்டார் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்றனர் என்பார் பார்ப்பனர்கள். வீர்யத்திற்கே காயத்ரி மந்த்ரம் ஜெபிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அல்லவா! இப்படித்தான் வாயைப் பிளப்பார்கள்.
ஆயுர்வேத சாத்திரம் என்பது நான்காம் சாத்திரம். மருத்துவம் பற்றிய சாத்திரமாம். அறுவை சிகிச்சைபற்றியெல்லாம் இதில் உண்டாம். பால்கடலைக் கடைந்து ஆலகாலமும் மற்றவையும் வந்தபோது மூதேவியும் சீதேவியும் வந்தபோது, உடன் வந்ததாம் ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும்! பிறகுதான் அமுதம் வந்ததாம். ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும் இதுவரை கிழித்தது என்ன? பைத்தியக்காரர்களின் வீடு (விகிஞி பிளிஹிஷிணி) என்று விவேகானந்தரால் வருணிக்கப்பட்ட மலை-யாளத்தில் மட்டும் கொடிகட்டிப் பறக்கும் மருத்துவம். இதை நம்பி அண்ணா, வி.வி.கிரி போன்றவர்களை நவரை, பிழிச்சல் என்று எண்ணெய் வைத்தியம் பார்க்க வைத்தார்கள். வயோதிகத்தை வெளிக்காட்ட விரும்பாத வலிப்பு நடிகர்கள் இன்றைக்கு இந்த மருத்துவமுறைக்கு விளம்பர தூதர்களாகச் செயல்படப் பயன்படுகிறது. மற்றபடி பல்பொடி, தலைமயிர் எண்ணெய், சோப்பு எண்ணெய் என இரண்டொரு உபயோகப் பொருள்களின் விலையைக் காட்டிச் சொல்வதற்கு மட்டுமே ஆயுர்வேதம் பயன்படுகிறது. இதைச் சொல்ல ஒரு சாத்திரமாம்! தேவையா?
அய்ந்தாவதாக வந்துள்ளது வாஸ்து சாத்திரமாம். கோயில்களை எப்படிக் கட்டுவது என்பதுபற்றிய வரைபட விளக்கநூல் இது. ஆகவேதான் இதில் சமையல் அறை (கோயிலில் மடப்பள்ளி) உண்டு. கழிப்பறை கிடையாது. ஏன் என்றால் கடவுளுக்கு மலம் வராது. (மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வரும்) இந்த சாத்திரத்தை மனிதன் வசிக்கும் வீட்டுக்கானது எனக் கூறிச் சம்பாதிக்கிறார்கள்; ஏமாற்று-கிறார்கள். அதுவும்-கூட இந்நாட்டில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாஸ்து சாத்திரம்; தெற்கே ஒரு வாஸ்து சாத்திரம். இதைப்பற்றிய பித்தலாட்டங்களைத் தனியே பார்க்கலாம்.
மனிதனோடு, மனித வாழ்க்கையோடு இணைந்து, இயங்கும் தத்துவங்களை இந்தியத் தத்துவம் எனக் கூறலாம். அந்த இலக்கணப்படி, சாங்கியம் என்பது ஒரு தத்துவம். கபிலரால் வழங்கப்பட்டது. சாங்கியம் என்றால் எண்ணம் எனப் பொருள். கபிலரைக் கபிலமுனி (KAPILA) என்றாக்கி அவருடைய தத்துவம் சாங்க்யா என்று எழுதி வைத்துக் கொண்டனர் ஆரிய வட-மொழியினர். சாங்கியம் எனக் கபிலர் சொன்னது எண்ணம், எண்ணுதல், சிந்தனை செய்தல், நினைத்தல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ஆனால் பார்ப்பன சாங்க்யம் என்றால் 1, 2, 3 என எண்ணுதல் (COUNTING) என்று பொருளாம். எப்படிப் பொருத்தம் எனக் கேட்டால், அது மறைந்துவிட்டது என்று கூறிவிடுகிறார்கள். சாங்கியம் என்றால், ஒரு செய்தியை புதுவிதமாக மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சொல்வதை சாங்கியம் எனலாம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு எனலாம். நினைத்தேன், வந்தாய் எனப் பாடும் பாடலை நினைத்துக் கொள்ளலாம்.
அடுத்தது யோகம். யோகா என்பார்கள். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் யோகிகள். ஊண் சுருக்கி, உள்ளொளி பெருக்கி, யோகம் எனும் பயிற்சி முறை பயின்று வாழ்பவர்கள். மனமும் உடலும் ஒன்றி செயல்படுவதைத்தான் யோகம் என்கிறார்கள். காலை 4 மணிக்கு எழவேண்டும் என்ற நினைப்போடு படுத்துத் தூங்குபவர்கள் 4 மணிக்கு எழுந்து-விடுவதைப் பார்க்கிறோம். அதைப் பழகியவர்களை யோகி எனலாம்.
மீமாம்சம் என்பது அடுத்த தத்துவம். செயல்முறை வித்தகத்தை மீமாம்சம் எனலாம். விதைக்கப்படும் ஒரு நெல்மணி நூற்றுக்-கணக்கான நெல் மணிகளாகப் பயிரில் செழித்து விளைகிறது அல்லவா, அத்தகைய செயல்வினை ஆற்றுதல் மீமாம்சம்.
ஞாயம் என்கிற தத்துவமுறை எது சரி, எது தவறு எனப் பகுத்துப் பார்த்து முடிவு செய்கிற ஆய்வு முறையாகும். இதைத் தர்க்கம் எனவும் கூறலாம். ஏரணம் என்று மெய்ப்-பொருளைக் காண்பதற்காக விவாதம் நடத்துகிற முறை என்பதாகும். எல்லா மதங்களுமே அவற்றின் நூல்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள், நம்பு, அய்யம் கொள்ளாதே, கேள்வி கேட்காதே என்றெல்லாம் மிரட்டு-கின்றன. அதற்கு நேர் மாறாக எதையும் தர்க்கித்து விவாதம் நடத்தி முடிவுக்கு வரவேண்டும் ஞாயத்தை உணர-வேண்டும் என்கிற தத்துவம் நம்முடையது.
பொருள்தான் முதலில் எனப்படும் பொருள்முதல்வாதம் ஒன்று. கருத்துதான் முதலில், பின்னர்தான் பொருள் உருவானது என்பது கருத்துமுதல்வாதம் என்பது மற்றொன்று. பொருள் முதல்வாதம் கடவுளுக்கு வேலை இல்லை என்கிறது. கருத்து முதல்வாதம் அல்லது எண்ண முதல்வாதம் என்பது எல்லாவற்றிற்கும் கடவுளைக் கட்டி அழுவது. பொருள்களின் தன்மைபற்றியும் திரவியங்கள், குணங்கள், இயக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்த தத்துவம்தான் வைசேஷிகம் எனும் தத்துவம். கணாதர் என்பவர் ஆய்வு செய்த தத்துவம்.
ஆக, இந்த ஆறுவகைத் தத்துவங்களில் வேதாந்தம் வேதத்தைத் தாங்கிப்பிடிப்பது என்பது வெளிப்படையாகத் தெரிந்த சேதிதான். மீதி உள்ளவை வேதத்தைத் தாங்கியவையா தாக்கியவையா என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். கடவுள் என்கிற மாயையை எப்படியெல்லாம் மறுத்து கருத்துகள் மேலோங்கியிருந்தன என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.


இந்தியத் தத்துவ ஞானம் என்பதற்கு விளக்கம் கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.
காலத்தால் மூத்த கவுடில்யரின் அர்த்தசாத்திரத்தில் (சாணக்கியம்) மூன்று வகை தத்துவங்களைப் பற்றிக் கூறுகிறார். சாங்கியம், யோகம், லோகாயதம் என்பவை அவை. மாத்வாச்சாரியார் 16 தத்துவ ஞானங்கள் இருப்பதாக அவரது சர்வ தர்ஷண சங்கரஹம் எனும் நூலில் கூறுகிறார். ஆனால் இன்றைய தத்துவ ஆசிரியர்கள் கூற்றுப்படி அவை ஒன்பது மட்டுமே. அவையே, நாத்திகப் பகுதி என்றும் ஆத்திகப் பகுதி என்றும் இருபெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன.
நாத்திகம் என்பது இன்று கடவுளை மறுப்பது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. கடவுள் எனும் சொல் திருக்குறளில் கையாளப்படாத சொல். அதனை ஏற்பதற்கும் தமிழில் சொல் இல்லை. மறுப்பதற்கும் தமிழில் சொல் இல்லை. நாஸ்திகம், ஆஸ்திகம் எனும் வடசொற்களே தமிழ்ப்படுத்தப்பட்டு வழங்கப் பெறுகின்றன. நாஸ்திக வேத நிந்தக என்றுதான் மனுநூல் விளக்கம் தருகிறது. வேதத்தை ஏற்காதவன் அல்லது மறுதலிப்பவன்தான் நாத்திகன் என்று பொருள்படுகிறது. எனவே இச்சொல்லுக்கும் கடவு-ளுக்கும் தொடர்பு இல்லை.
அப்படியானால், வேத மறுப்புத் தத்துவங்கள், வேத ஏற்புத் தத்துவங்கள் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். வேதமறுப்புத் தத்துவங்களாக, லோகாயதம், புத்தம், சமணம் (ஜைனம்) என்ற மூன்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வேத ஏற்புத் தத்துவங்கள் எனும் பட்டியலில், மீமாம்சம் (உத்தர மீமாம்சம், பூர்வமீமாம்சம்) வேதாந்தம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம், யோகம் ஆகிய ஆறும் வருகின்றன.
மக்களிடையே பரவியிருந்த தத்துவம் ஆனதால் லோகாயதா என அழைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் (லோகேசு) பரவியிருந்தது (ஆயுதா) எனப் பொருள். மகிழ்ச்சியாக இருத்தல், பொருள் தேடல், ஆண் பெண் சுகித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து சாவுக்குப் பின் பேரானந்தம் தரக்கூடிய மோட்சம் எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கும் கொள்கை கொண்ட மக்கள் லோகாயதவாதிகள்.
உலகாயவாதிகள் சார்வாகக் கொள்கைக்காரர்கள் என்பதுதான் மாத்வர் சொன்ன விளக்கம். பிரகிருதிஜனம் என்று அவர் கூறுகிறார் இந்தக் கொள்கை கொண்டவர்களை. இந்தத் தத்துவத்தைப் பொருள்முதல்வாதம் எனும் பொருள் கொண்ட மெட்டீரியலிசம் எனும் சொல்லால் ஆங்கிலத்தில் கூறுவார்கள்.  மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என்பது தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய நூலின் தலைப்பு.
மகிழ்ச்சியும் இன்பமும் அனுபவிக்கப்பட வேண்டியவை எனும் வாழ்க்கை முறையைச் சிற்றின்பம் எனவும் காமதேனுவும் கற்பக மரமும் ரம்பை ஊர்வசி மேனகா திலோத்தமை போன்ற விலைமகளிர் தாராளமாகக் கிடைக்கும் (விலையில்லாமல் கிடைக்கும்) இடமான புரட்டுக் கற்பனையான பரலோக இன்பத்தைப் பேரின்பம் எனவும் பிரித்த அயோக்கியர்கள் லோகாயதத் தத்துவம்பற்றிய நூல்களை அழித்துவிட்டனர்.
பின்னர், அத்தத்துவம்பற்றிய கண்டனங்களை எழுதிப் பரப்பி விட்டனர். அப்படிப் பரப்புரை செய்யும் நூல்களில் வாதமிடும்போது குறிக்கப்பட்டுள்ள தத்துவங்களைப் பற்றிய சிலவரிகள் மட்டுமே இன்றைய நிலையில் லோகாயதக் கொள்கைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன.
அபிதான சிந்தாமணியின் உலகாயதம் மதம் பற்றிய விளக்கம் பின்வருமாறு: இவன் நீரிசுவரவாதி. இத்தூலதேகத்தில் எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால் விவகாரங்கள் நீங்குகின்றனவோ, அதற்குக் காரணமானதே ஆத்மா என்பவன். அவ்வாத்மா ஸ்தூல சரீரத்திற்குப் பின் ஜீவித்தல், மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியெமே ஆத்மா என்பான். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இவை கலந்த காலத்து உண்டாகுஞ் சிவப்பு போலவும், விறகைக் கடைந்த கபிலத்து உண்டாகும் நெருப்பு போலவும் உண்டாம். கடவுள், மறுஜன்மம், ஆத்மா என்பன இல்லை என்பவன். உலக இன்பங்களை அனுபவித்து இருப்பதே முக்தியென்பவன்.
ஆக, கடவுள், மறுபிறப்பு, ஆத்மா ஆகியவற்றைக் கற்பனைகள் எனக் கண்டித்து ஏற்க மறுப்பது லோகாயத மதம் அல்லது வாதம்.
லோகம் என்பதை நம் கண்ணால் காணக் கூடியதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுமான இந்த லோகம் _ இகலோகம் எனப் பொருள் கூறுவதும் உண்டு. இதன் மூலம் பரலோகம் எனும் கற்பனையை ஏற்க மறுத்தவர்கள் என்பது விளங்கும். மாத்வர் இதனைத் தெளிவாகவே கூறிவிட்டார்: லோகாயதவாதிகள் _ மேல் உலகத்தை மறுப்பவர்கள் என்று.
மேல் உலகத்தை மறுக்கிறவர்கள் என்றால் கீழ் உலகத்தையும் மறுக்கின்றவர்கள் என்றுதானே பொருள்படும்? மோட்சம் கிடையாது என்றால் நரகமும் கிடையாது என்றுதானே பொருள்? வேதவாதிகள், நரகத்தைச் சொல்லி அச்சுறுத்தி மோட்சத்தைச் சொல்லி ஆசைகாட்டித் தம் (பொய்த்) தத்துவத்தைச் செலாவணியாக்கி ஏமாந்தவர்களை ஏமாற்றினார்கள். லோகாயதவாதிகள் ஏமாறாதவர்கள்.
துவைதம் பேசிய மாத்வர் கூற்று அப்படியென்றால், அத்வைதம் பேசிய சங்கரன் லோகாயதவாதிகள் அநாகரீக மக்கள் என்று வசை பாடிப் போய்விட்டார். ஆனால் மனுவோ, லோகாயதவாதிகள் வல்லமை மிக்க தர்க்கவாதிகள் என்று சான்று அளித்துள்ளார். இந்த மனு எழுதிய நீதிநூலுக்கு உரை எழுதிய மேதநிதி என்பவர், வேதத்தை எதிர்த்து வாதிடும் வல்லமை பெற்ற திறமையாளர்கள் என்றும் மோட்சம் எனும் பிரமைக்கு (கற்பனைக்கு) மக்கள் இரை ஆகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப் பாடுபடுபவர்கள் என்றும் நற்சான்று வழங்கியுள்ளார்.
பரலோகம் இருக்கிறது என நம்புவது, கடவுளுக்கு நைவேத்யம் செய்வது, காணிக்கை அளிப்பது போன்ற அனைத்தும் பயனற்றது எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள் லோகாயதர்கள் என்றும் அதே மேதநிதி கூறியுள்ளார்.
வேதங்களை ஏற்க மறுத்ததோடு, அதனை மறுக்கவும் பிரச்சாரம் செய்தவர்கள் லோகாயதர்கள். இவர்களுடைய கருத்துகளுக்கு ஏகப்பட்ட செல்வாக்கும் அக்காலகட்டத்தில் உண்டு. ஆகவே வேதவாதிகள் புரட்டுப் பிரச்சாரம் பலிக்காமல் போன நிலையில் அவர்களை அழிப்பதன் மூலமும் அவர்களின் தத்துவ நூல்களை ஒழிப்பதன் மூலமும் வேதவாதிகள் தற்காலிக வெற்றியைச் சுவைத்தனர். இன்று, லோகாயதம் பற்றியோ, அதனைப் பின்பற்றிப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற சார்வாகர்கள் பற்றியோ எந்த நூலும் இல்லாமல் அழித்து ஒழித்து விட்டனர்.
வேதக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணானதோர் அசுரக் கருத்தும் உண்டு என்று கண்ணன் தன் கீதை உபதேசத்தில் அர்ச்சுனனிடம் கூறியிருப்பதாக கீதை கூறுகிறது. தனக்கு எதிரானவர்களை அசுரர் எனச் சுட்டித் திட்டுவது வேதமோதிகளுக்கு வழக்கமானதுதான். என்றாலும் கூட, வேதமோதிகளால் முழுமையாகவும் புறக்கணிக்கப்பட முடியாதவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை கீதை வாசகம் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
அய்ந்து கணவர்களில் மூத்தவனான தர்மன் என்பானிடம் அவனின் தர்மபத்தினியான திரவுபதை பேசுகையில், அவனுடைய தந்தை திரவுபதன் லோகாயதத்தைப் பார்ப்பன ஆசிரியன் ஒருவனிடம் கற்றதாகக் கூறுகிறாள் என்று மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதத்தை அய்ந்தாம் வேதம் என்று வேதமோதிகள் புகழ்ந்து கூறுவர். பார்ப்பனர்கள் கற்கவேண்டிய கல்வித் திட்டத்தில் லோகாயதமும் இடம் பெற்றிருந்தது என்பதே அதன் தவிர்க்க இயலாத் தன்மையை எண்பிக்கும்.
லோகாயதத்தை விளக்கும் தத்துவ நூல் ஏதும் இன்றில்லை எனினும், அதனைத் தாக்குவதற்கு வேதமோதிகள் பயன்படுத்திய மேற்கோள் வசனங்களிலிருந்தும், வேதமோதிகளின் கருத்துகளிலிருந்தும் லோகாயதவாதம் என்பது இன்னதுதான், இப்படிப்பட்டதுதான் என்கிற அனுமானத்திற்கும் முடிவுக்கும் வரவேண்டி இருக்கிறது. இதனைப் பரபக்கவாதம் என்பார்கள்.
அந்த முறையில் லோகாயதவாதம் எனும் கடவுள் மறுப்புக் கொள்கைபற்றிய விவரங்களைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
சந்திரகீர்த்தி என்பார் எழுதிய பிரக்ஞ்ன சாத்திரம் எனும் நூலில் உலகாயத சாத்திரம் பற்றிய மேற்கோள் இடம்பெற்றுள்ளது.
திவ்யவதனம் எனும் பவுத்த நூலில் உலகாயதம் என்பது கல்வித்துறையின் ஒரு பிரிவே என்றும் அதற்கு உரையும் விளக்கமும் உண்டு என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாத்வரின் சர்வ தரிசன சங்கிரகத்திற்குப் பின் இணைப்பு எனக் கருதக்கூடிய பிரபோத சந்திரோதயம், சர்வ சித்தாந்த சங்கிரகம் ஆகிய நூல்களிலும் லோகாயதத் தத்துவங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
பவுத்த மத நூலான குததந்த சுத்தா எனும் நூலில் உலகாயதக் கொள்கைகள் பேசப்படுகின்றன.
அதைப்போலவே, பிரம்மஜல சுத்தா எனும் நூலில் லோகாயதவாதக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. (பாலி மொழியில் சுத்தா என்றால் வடமொழியில் சாத்திரம் எனப் பொருள்)
சுக்ரநீதிசாரம் நூல் கலை, விஞ்ஞானங்களைப் பட்டியலிடும்போது தர்க்கரீதியான விவாதங்களில் நாத்திகர்கள் வல்லவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. சர்வம் ஸ்வாயாபிகம் மதம் எனும் வரிகள் உலகாயதக் கொள்கையைக் காட்டுபவை. எல்லாமே இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் என்று இதன் பொருள். கடவுள் என்ற ஏதோ ஒன்று எங்கோ குந்திக் கொண்டு இவ்வுலகத்தையும் உயிர்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது தவறு.
இதையே வேறு வகையில் கவுடில்யன் (சாணக்யன்) அர்த்த சாத்திரத்தில் அன்விக்சிகி என்கிறார். அப்படியென்றால் தர்க்க விஞ்ஞானம் எனப் பொருள்.
மனுசாத்திரத்திற்கு உரை எழுதிய மேதாதி உலகாயதர்களின் (சார்வாகர்களின்) தர்க்கவித்யா (வாதம்புரியும் திறமை)பற்றி எழுதுகிறார். ஹேதுசாத்திரம் (தர்க்கம்) ஹேதுகர்கள் (தர்க்க அறிஞர்கள்) என்றெல்லாம் சார்வாகர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். ஹேதுவாதி என்பது பகுத்தறிவாளர்களைப் பற்றிய தெலுகுச் சொல். இவர்களைத்தான் பிற்காலத்தில் புராணம் எழுதிய புரட்டர்கள் பாஷாண்டிகள் என்று ஏளனம் பேசினர்.
ஜெயந்த என்பார் எழுதிய நியாய மஞ்சரி எனும் நூலில் உலகாயதக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லோகாயதம், உலகாயதம், தேகவாதம், சார்வாகம், சுபாவவாதம், நான்கு பூதவாதம் என எந்தச் சொல்லால் குறிப்பிட்டாலும் அவை ஒன்றையே குறிக்கின்றன. கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு, மறுபிறப்பு முன்பிறப்பு மறுப்பு, மோட்ச நரகப் புரட்டை ஏற்க மறுப்பு போன்ற பகுத்தறிவுக் கண்ணோட்டமுடைய தத்துவத்தைக் குறிக்கும் சொற்களே! பொருள்முதல்வாதம், நாத்திகம் என்றெல்லாம் வழங்கப்படும் கொள்கைகளைக் குறிப்பிடும் சொற்களே!
வேதமோதிகள் இந்த உலகம் பஞ்சபூதங்களின் சேர்க்கை என்பார்கள். நிலம் நீர், தீ, காற்று, வானம் ஆகிய அய்ந்து பூதங்கள் (தனிமங்கள் ELEMENTS) என்பார்கள். லோகாயதவாதிகளான சார்வாகர்கள் இவை நான்கே தனிமங்கள்தான்.
நிலம், நீர், தீ. காற்று ஆகிய நான்கு தனிமங்கள் மட்டுமே உலகையும் உயிர்களையும் உருவாக்கியவை; வானவெளிக்கு வேலையே கிடையாது என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.
அபிதான சிந்தாமணி, சார்வாக மதம்பற்றி எழுதும்போது, இது நாஸ்திக மதம். கடவுளுக்கு மோட்ச அதிகாரமில்லை எனவும் உலகத்தில் உள்ளவரையில் சுகமாய் ஜீவிக்க வேண்டும் எனவும், மரணமே மோட்சம் எனவும், வேறு பிறப்பில்லை எனவும், பரலோக சுகமில்லை எனவும் ஆகாசம் நீங்கலாகத் தத்வம் நான்கு எனவும், இந்த நான்கு தத்வாமுதாயமே தேகம் எனவும் இவற்றால் ஆகிய இந்திரிய சமுதாயமே ஆத்மா எனவும் இந்திரிய நாசமே மரணம் எனவும் கூறும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. புலன்கள் ஒடுங்கிப் போனதுதானே இறப்பு?
வேதமோதிகளின் புரட்டுக் கற்பனைக் கருத்துகளுக்கு மாறான கருத்து என்பதால் சார்வாகர்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிசொற்களைக் கொண்டு வருணித்துள்ளார்கள். அய்ந்தாம் வேதம் எனக் கூறப்படும் மகாபாரதக் கதையில் சார்வாகன் ஒருவனைக் கொல்லும் சம்பவம் வருகிறது. கவுரவர்களைக் கொன்று போரில் வென்று பாண்டவர்கள் முடிசூடிக்கொள்ள வரும்போது பார்ப்பனர்கள் கூடிநின்று வாழ்த்தினர். அப்போது சார்வாகன் முதல்வரிசைக்கு வந்து உரத்த குரலில், உங்கள் உறவினர்களையும் மூத்தோர்களையும் கொன்று தீர்த்துவிட்டீர்கள். அதன் மூலம் நீங்கள் அடைந்த பலன் என்ன? இரத்தவாடை வீசும் உடலுடன் அரியாசனத்தில் அமரப் போகிறீர்கள். நீங்களும் ஒருநாள் சாகத்தான் போகிறீர்கள் என்று கூறினான். உண்மையைக் கூறினான்.
தருமன் அதிர்ச்சியில் உறைந்துபோய் ஒன்றும் தோன்றாமல் நின்றுவிட்டான். வேதனைப்பட்டான். இரத்த வாடை வீசும் ஆட்சி கட்டிலில் அமர்வதற்குப் பதில் இறந்துபோய்விடலாம் என்கிற எண்ணம் மேலோங்கியது. ஆனால், குயுக்தியான மனமும் செயலும் கொண்ட பார்ப்பனர்கள், சார்வாகனை அரக்கன், மாயப் பிசாசு என்றும் கூறி மாறுவேடத்தில் வந்துள்ள துரியோதனனின் நண்பன் என்றும் கூறி அவன் கிடக்கட்டும் தரும ராஜாவே! நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம், ஆசீர்வதிக்கிறோம் எனப் பசப்பு மொழி பேசினர். தருமன் பார்ப்பனர்களுக்குப் பொற்காசுகளை வழங்குமாறு சைகை காட்டினான். தானம் நடந்தது. மனம் மகிழ்ந்த பார்ப்பனர்கள் சார்வாகனை நெய் கொதித்துக் கொண்டிருந்த கொப்பரையில் தள்ளித் துடிக்கத் துடிக்கக் கொன்றனர்.
வேதமோதிகளின் கருத்தை எதிர்க்கும் எவரையும் அசுரர்கள் என முத்திரை குத்திக் கொல்லும் கலை அவர்களின் கைவந்த கலை. வேத எதிர்ப்பைக் கையாளும் பாஷாண்டிகளுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்றே ஜாதிக்கட்டு போட்டுவிட்டார் மனு. இவர்களிடம் பேசினால், அவர்கள் தம் வாதங்களினால் மறு உலகம் என ஒன்று இல்டில என்பதை எண்பித்து விடுவார்கள் எனப் பயந்தனர். யாகங்களையும் வேதங்களின் அதிகார உயர்வையும் எதிர்த்து ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சமே காரணம். லோகாயதவாதிகளின் பகுத்தறிவுவாதம் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டது என்று மனம்போன போக்கில் எதிர்ப்பு காட்டினர். மாத்வரின் துவைதம் இதைத்தான் காட்டுகிறது.
சத் தரிசன சமுச்சயம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதிய மணிபத்ர என்பவர், சுவர்க்கம் போவது, நன்மை தீமை பற்றிப் பகுத்தறிவது ஆகியவைபற்றி வேதமோதிகளான ஏமாற்றுக்காரர்கள் மக்களை பொய்த்தோற்றம் காட்டி ஏமாற்றுகின்றனர். இத்தகைய புரட்டுகளைத் தோலுரிப்பதற்காகத்தான்.

- சு.அறிவுக்கரசு

Monday, December 3, 2012

எது தண்டம் ?

கொள்கை இல்லாத அரசியல்
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
நேர்மை இல்லாத வியாபாரம்
சமுதாயத்திற்கு பயன்படாத விஞ்ஞானம்
உழைப்பு இல்லாத ஊதியம்
ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்காத கல்வி

இவற்றால் எந்த பயனும் இல்லை.

மதங்களை பின்பற்றுபவர்கள் ஆபத்தானவர்கள்

பக்தி இலக்கியங்களால் இவ்வுலகிற்கு எவ்வளவு நன்மையோ அதே அளவு தீமையும் உருவாகியிருக்கிறது.

எல்லா மதத்தினரும் ஒரு நூலை வைத்திருக்கிறார்கள். அதை படிக்கிறார்கள். அதில் சொன்னவற்றை பின்பற்றுகிறார்கள். பின் ஏன் சண்டை போடுகிறார்கள் என்று தெரியவில்லை.

அது கடவுளால் சொல்லப்பட்ட வேதம் என்றால் பின் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும் ?

ஒருவன் ஏதோ ஒரு கடவுளை ஏற்றுக்கொண்டான் என்றால் மற்ற கடவுளை குப்பைத்தொட்டியாக கருதுகிறான். அந்த மத நூலை வெரும் காகிதமாக கருதுகிறான்.

பின்பற்றுவர்கள் பெரும் முட்டாள்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற கேள்வி கேக்க அனுமதிப்பதில்லை. எவனும் அறிவுடன் யோசிக்கவில்லை. எந்த ஒரு மதத்திலும் ஒழுக்கம் பெரிய விசயமாக கருதப்படவில்லை. ஏதாவது தவறு செய்து விட்டால் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம் என சொல்லிக்கொடுக்கப் படுகிறது.

இதனால் மதங்களை பின்பற்றுபவர்கள் ஆபத்தானவர்கள். மதங்களை புரிந்து கொண்டவர்கள், அதைப் பற்றி சிந்திபவர்கள் தான் இவ்வுலகிற்கு தேவையானவர்கள்.

Saturday, December 1, 2012

சூரபத்மன் - கந்தபுராணம்

பிரம்மனுக்கு தட்சன், காசிபன் என இரு புதல்வர்கள். 

அதில் தட்சன் சிவனை நோக்கி தவம் இருந்து பெரும் வரங்களைப் பெற்றான். பின் தனக்கு பிறந்த மகள் தாட்சாயினியை சிவனுக்கு மணமுடிக்க எண்ணி பின் தரமறுக்க தாட்சாயினி தானே சிவனை நோக்கி தவம் இருந்து அடைந்தாள்.

காசிபனும் சிவனை நோக்கி தவமிருந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். இந்நிலையில் அசூரர் குல தலைவன் சுக்கிரன் தேவர்களை அழிக்க, ஒடுக்க எண்ணம் கொண்டான். இதைச் செய்ய உயர்ந்த குலத்தில் உள்ள பெண்ணுடன் காசிபனை உறவு கொள்ளச் செய்தால் நல்ல பிள்ளைகள் பிறக்கும் என எண்ணி மாயை என்ற பெண்ணை அனுப்பினான்.

காசிபன் தவமிருக்கும் இடத்திற்கு மாயை வந்தாள். காட்டை தன் வலிமையால் ஒரு நந்தனமாக மாற்றினாள். காசிபன் கண் திறந்து பார்க்க எதிரில் ஒரு அழகான பெண் இருக்கக் கண்டு உடனே அவளை அடைய ஆசைகொண்டான். இங்கே ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டிய காசிபன் பெண் ஆசை கொண்டதால் தன் தவ வலிமையை இழந்தான்.

அவளை நெருங்கி இங்கு என்ன செய்கிறாய் எனக் கேட்க அவளும் மன அமைதிக்காக இங்கு வந்தேன் என்றாள்.  உன்மேல் ஆசை கொண்டேன் என்னை ஏற்றுக்கொள் எனச் சொல்ல, அவளும் நான் என்ன வடிவம் எடுக்கிறேனோ அதை நீயும் எடுக்க வேண்டும் என கட்டளையிட்டாள். அதற்கு சம்மதித்தான்.

எல்லா ஆசைகளுடன் முதலில் இருவரும் இணைந்தார்கள். அதில் பிறந்தவன் சூரபத்மன். இதனால் சூரபத்மன் மிகவும் கொடியவனாக பலசாலியாக இருந்தான்.

பின் இரண்டாம் முறை சிங்க வடிவம் கொண்டு இருவரும் இணையும் போது சிங்கமுகன் பிறந்தான். ஆசை சற்றே அடங்கி இணைந்ததால் சிங்கமுகன் நல்லகுணம் பெற்றிருந்தான்.

பின் யானை வடிவம் கொண்டு இணைய தாருகன் பிறந்தான். 

கடைசியாக ஆட்டின் வடிவம் கொண்டு இணைய அஜமுகி பிறந்தாள்.

இவர்கள் நால்வரும் உடனே வளர்ந்தார்கள். பல வருடங்கள் தேவைப்படவில்லை.




Reason for being an agnostic man

1. Religion tries to hide the truth, science tries to find it.
2. There is no reason to "become an atheist", the question is "why religion"?
3. Everything previously explained as "God's work", has been explained scientifically or soon will be
4. I believe in acting kind because others deserve it, not because I'm afraid of hell. That shows no real moral integrity
5. The prospect of eternal worship of a cruel slave-master is less than appealing.
6. As we all know, the one thing that can make otherwise good people commit heinous acts is religion.
7. The concept of an insecure supreme being requiring constant praise seems illogical to me.
8. I'm not an idiot - I don't believe in fairy tales
9. I think for myself.
10. I'm smarter than my family.
11. I just can't decide which one of the thousands of gods to choose from.
12. Religion divides people instead of bringing them together. Already enough walls in our minds.
13. I choose to do good because I'm a good person, not because I'm scared god will punish me if I don't.
14. This life is enough.
15. Religion is a prison for the mind.
16. I don't believe everything I read
17. I didn't have an imaginary friend as a child, and I won't have one as an adult.
18. There is not a shred of evidence that a God exists!
19. Religion is based on assumptions made about the natural world at a time when nothing was known about it
20. It's the only option with intellectual integrity.
21. It stops me from fearing death, but keeps me from wanting to hasten it.
22. I ask questions, and want true answers.
23. I choose not to believe in oppressive, superstitious nonsense and lies.
24. If I went round at work talking about an invisible mate, I would be arrested. Work with facts :)
25. The alternative is simply embarrassing