Friday, October 26, 2012

கண்ணப்ப நாயனார்.

பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர்களுக்கு அரசனாயிருந்த நாகனுக்கும் அவன் மனைவி தத்தைக்கும் குழந்தை பிறந்தது.  குழந்தையை தூக்கும் போது திண் திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.

வாலிப வயதடைந்த திண்ணன் தன் நண்பர்கள் காடன் மற்றும் நாணனுடன் வேட்டைக்கு சென்றான். ஒரு பன்றியை தொடர்ந்து, அதை வேட்டையாடி கொன்றாகள். பின் தாகம் எடுத்தால் தண்ணீர் வேண்டும் என் எண்ணிய போது நண்பன் அறிவுரைப் படி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றனர்.  திண்ணன் காடனிடம் பன்றியை பதப்படுத்த சொல்லிவிட்டு நாடனுடன் பக்கத்தில் இருக்கும் மலைப்பகுதிக்கு சென்றனர்.

மலையில் இருக்கும் கோவிலில் எழுந்தருளியுள்ள சீகாளத்தியப்பரை தரிசனம் செய்துவிட்டு அவருக்கு படைக்க பட்டிருக்கும் உணவையும் சூடியிருக்கும் பூக்களைப் பற்றி நண்பனிடம் இது என்ன என்று கேட்டான் திண்ணன்.

அதற்கு நாணன் உன் தந்தையும் நானும் போன முறை இங்கு வந்தோம். அப்போது ஒரு வேதியர் இவரை நீராட்டி பூக்கள் சூடி அவர் கொண்டு வந்திருந்த உணவைப் படைத்து ஊட்டக் கண்டேன்  என்றான். இங்கு எழுந்தருளியிருக்கும் சீகாளத்தியப்பருக்கு இப்படி செய்தால் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றான்.

இதைக்கேட்ட திண்ணன் நானும் அதன்படி செய்ய விருப்பப் படுகிறேன் எனச்சொல்லி மலைமீது இருந்து கீழே வந்து பதப்படுத்தி வைத்திருந்த பன்றியையும் வரும் வழியில் பூக்களையும் பறித்துக் கொண்டு வந்தான். அந்த கோவிலை முழுவதுமாக சுத்தம் செய்தான். ஆற்றில் இருந்து நீரை வாயில் எடுத்து வந்து அவரை நீராட்டி தான் கொண்டு வந்திருந்த பூக்களைச் சூடி பன்றிக் கறியை சுவாமிக்கு படைத்தான்.

நண்பர்கள் இதனை திண்ணனின் தாய் தந்தையிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து திண்ணனை வீட்டிற்கு வரச்சொல்ல அதற்கு சுவாமிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து சென்றான்.

மறுநாள் வந்த வேதியர் அங்கிருந்த மாமிச உணவைக் கண்டு அதை அப்புறப் படுத்தி மீண்டும் நீராட்டி பூச்சூட்டி தான் கொண்டு வந்திருந்த உணவை படைத்தார்.

மறுநாள் திண்ணன் வந்து வேதியர் செய்ததை அப்புறப் படுத்தி தன் வழக்கம் போல் மாமிச உணவைப் படைத்து பூச்சூடிச் சென்றான்.

வேதியர் வந்து பார்க்க சுவாமியிடம் வேண்டினான். அதற்கு சுவாமி தோன்றி உன் பூசையை முடித்துவிட்டு மறைந்திருந்து காத்திடு என்றார். அதுபோலவே வேதியரும் செய்ய திண்ணன் வந்து தன் பூசையை தொடங்கினான்.

இப்போது சுவாமி தன் ஒரு கண்ணில் இருந்து உதிரம் கொட்டச் செய்தார். அதைக் கண்ட திண்ணன் தன் கண்ணை எடுத்து சுவாமிக்குப் படைத்தான். வேதியரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது மற்றொரு கண்ணிலிருந்தும் உதிரம் கொட்டச் செய்தார். அதைக் கண்ட திண்ணன் தன் காலால் சுவாமியின் கண்ணினருகே ஊன்றிக் கொண்டு மற்றொரு கண்ணையும் பறிக்க முற்பட்டான்.

சுவாமி  உடனே கண்ணப்பா நில் உன் அன்பு கண்டு வியந்தேன் என திருவாய் மலர்ந்து தமது வலப்புறமிருக்கும் பிறவாப்பேறளித்தனர். சுவாமி வழங்கிய கண்ணப்பன் என்ற பெயர் இன்று வரை நிலைத்திருக்கிறது.

இந்த கண்ணப்பன் முன் ஜென்மத்தில் அர்ச்சுனன் என்ற பெயர் கொண்டவன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.