இவன் யார் ? மகத தேசத்தின் அதிபதியான பிருகத்ரதன் மகன். இந்த பிருகத்ரதன் ரொம்ப நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்த வேளையில் சண்டஹௌசிக முனிவரை வேண்டினான். அப்போது தவத்திலிருந்த முனிவர் ஒரு மாம்பழம் கொடுத்து பிருகத்ரதன் மனைவியை உண்ணச் சொன்னார். அதையே மன்னனும் செய்ய, பிருகத்ரதன் மனைவியோ தன் சக்களத்திக்கும் பாதி மாம்பழம் கொடுத்தாள். இதனால் இருவருக்கும் பாதி உருவமோடு பிள்ளைகள் பிறந்தனர். இதனைக் கண்ட மன்னன் இருவரையும் ஊருக்கு வெளியே தூக்கிவீச உத்தரவிட்டான். அதன் படியே தோழியரும் செய்தனர்.
அந்த ஊரைக் காக்கும் அரக்கி சரை என்பவள் பாதி உருவம் கொண்ட குழந்தைகளை எடுத்து இணைத்து ஒரு உருவமாக்கினாள். அது உயிர் பெற்று அழத்தொடங்கியது. இதைக்கேட்ட மன்னன் அக்குழந்தையை சரையிடமிருந்து பெற்று சராசந்தன் எனப் பெயரிட்டு வளர்த்தான்.
இவன் வளர்ந்தவுடன் கிருஷ்ணனுடன் பலமுறை போர்தொடுத்து வெற்றி பெற்றுருக்கிறான். ஒருமுறை கதாயுதத்தை சுழற்றி எறிந்து கிருஷ்ணனது பாதி நாட்டை கைப்பற்றினான்.
இன்னொருமுறை இராமகிருஷ்ணருடன் போர்தொடுக்க அவர்களை எதிர்கொண்டு விரட்டினான். அவர்களும் கோமந்தபருவத்தில் ஒளிந்தனர். தேடித்தேடி அலுத்துப் போய் அருகில் உள்ள மலையைக் கொளுத்தினான். இதையறியாத இருவரும் வெளியே வர வெட்கத்துடன் தன் படைவீரர்களை எல்லாம் இழந்து திரும்பிச் சென்றனர்.
இவனிடம் கண்ணன், பீமன் மற்றும் அருச்சுணன் மூவரும் வேதியர் உருவம் எடுத்து யுத்தபிச்சை யாசித்தனர். அதற்கு இணைந்து பீமனுடன் மல்யுத்தம் செய்கையில் கண்ணன் புல்லைப் பிளந்து பீமனறிய இருபுறம் எறிந்தான். அந்த குறிப்பை உணர்ந்த பீமன் அவன் காலைகிழித்து இருபுறம் எறிந்து கொன்றான்.
அபிதான சிந்தாமணி பக்கம் 599.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.