Monday, October 1, 2012

நட்பு

உங்கள் வீட்டில் நடக்கும் கல்யாண விசேஷத்தில் முக்கியமான பிரமுகர் வந்திருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் மணமக்களை வாழ்த்திவிட்டு அவசரமாக விடைபெறும் போது இருங்க சாப்பிட்டு விட்டு போங்க என்று பந்திக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.

ஆனால் பந்தியில் உட்கார இடமில்லை. இப்போது யாரை எழுப்பி அந்த பிரமுகரை உட்கார வைப்பீர்கள்?

சொந்தக்காரங்களை எழும்ப சொன்னால் பிரச்சனை வரும். இந்த நேரத்தில் உங்களால் எழுந்து இவருக்கு இடம் கொடு என்று சொல்லி எழுப்ப முடிந்த முடியும் ஒரே ஆள் உங்கள் நண்பன்.

ஏனென்றால் நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, மன வருத்தம் இல்லை, பழிவாங்கும் எண்ணம் இல்லை. நீங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்து இருந்தால் என்ன செய்வீர்களோ அதயே நண்பனிடம் பார்க்கிறீர்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.