Friday, November 30, 2012

இராமாயணம் - கந்தபுராணம்

ஒப்பீடு
இராமாயணம்
கந்தபுராணம்
பெயர்
இராவணன்
சூரபத்மன்
வரம்
சிவனிடம் வரம் வாங்கினான்
சிவனிடம் வரம் வாங்கினான்
மனைவி
மயன் மகள் மண்டோதரி
மயன் மகள் பதுமகோமளை
வாழ்ந்த காலம்
முக்கோடி
108 யுகம்
நாடு
இலங்கை
மகேந்திரம்
மகன்
இந்தரஜித், அட்சயகுமாரன்
பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு 
தம்பி
விபீஷ்ணன் கும்பகர்ணன்
சிங்கமுகன், தாருகன்
தங்கை
சூர்ப்பனகை
அஜமுகி
தூது சென்றவர்
அனுமன்
வீரபாகு


இந்த இரு கதைகளும் ஒன்று போல இருக்கிறது.  இருவரும் சிவனை நோக்கி தவமிருந்து வரம் வாங்கியவர்கள். இராமாயணப் போர்வர காரணமாக இருந்தவள் சூர்ப்பனகை. அதே போல் சூரபத்மன் முருகனுடன் போர் புரிய காரணமாக இருந்தவள் அஜமுகி.

இருவருக்கும் தூது செல்லம் விதமாக அனுமனும் வீரபாகும். இப்படி நிறைய ஒற்றுமைகள். 

வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்திற்கு போட்டியாக எழுதப்பட்டதா இந்த கந்தபுராணம் ?

ஆதாரம் - கந்த புராணம்.

Monday, November 26, 2012

பாவம்

சாப்பிடும் போது ஒருவரை எழ சொல்வது
குடிக்க தண்ணீர் கேட்டா தாமதமாகவோ கொடுக்காமாலோ இருப்பது
பூஜைக்கு உண்டான பூக்களை மிதிப்பது
சாமி கும்பிடும்போது அவர்களுக்கு குறுக்கே செல்வது
ஊனமுற்றோர்களை சுட்டிக் காட்டுவது
பங்காளி இறந்து போனால் தலைமுழுகாமல் இருப்பது
நல்ல நூல்களை புறக்கணிப்பது
இறைவனைப் பற்றி நாத்திகம் பேசுவது
தியானம் செய்யும் போது கலைப்பது

Sunday, November 25, 2012

திருப்தி


தண்டிப்பதினால் நியாயம் கிடைக்கலாம்.
மன்னிப்பதினால் சந்தோசம் கிடைக்கலாம்.
ஆனால் அதை மறந்து விடும்போது தான் திருப்தி கிடைக்கும்.

யாரை எப்போது வழிபடுவது?

ஞாயிறு - மாரியம்மன் சூரியன்
திங்கள் - சிவன்
செவ்வாய் - முருகன்
புதன் - நவகிரகம்
வியாழன் - ஆஞ்சநேயர்
வெள்ளி - அம்பாள்
சனி - பெருமாள்


அழிவு

வாயாலே மீன் அழியும்
நாசியாலே வண்டு அழியும்
உடலின்பத்தாலே யானை அழியும்
கண்ணாலே விட்டில் அழியும்
காதாலே அசுணம் அழியும்

மனிதன் இந்த ஐம்புலன்களில் எதனாலும் அழியலாம்.

Thursday, November 22, 2012

தமிழன் மொழியின் சிறப்பு

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தால் இன்னொரு உயிர் உருவாகும். அதற்கு பிறப்பு என்கிறோம்.

அதே போல் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்தால் உயிர்மெய் எழுத்து ஆகும். ஆக உயிர் இங்கே மெய்யோடு சேர்ந்து இருப்பதால் "பிறப்பு" என்றானது.

(ப+இ)றப்பு = பிறப்பு


உயிர் எழுத்தில் இருந்து மெய் பிரிந்து விட்டால், உயிர் தனியாகிறது. அதற்கு "இறப்பு" என்கிறோம்.

இ + றப்பு   = இறப்பு

பிறப்பு இறப்பு என்பதை இதைவிட எந்த மொழியிலும் அழகாக சொல்ல முடியாது.

-----------


அம்மா அப்பா என்று சொல்லும்போது 'ப' வல்லினமாகவும் 'ம' மெல்லினமாகவும் ஒலிக்கிறது.

தந்தையின் கண்டிப்பும் தாயின் அன்புயையும் குறிப்பது போல் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.



-----------


நாம் உண்ணும் உணவு வகைகளை நம் வாழ்வை ஒட்டியே வார்த்தைகளை அமைத்திருக்கின்றனர்.

பழம் சாப்பிடும் பொது வாய்திறந்து பழத்தை வாயினில் இட்டு பின் வாய் மூடிக்கொள்வது நம் செயல்.

அதில் 'பழம்' என்று சொல்லும்போது 'ப' என்றால் வாய் திறப்பதையும், 'ழ' எனும்போது வாயினில் இடுவதையும், 'ம்' என்றால் வாய் மூடிக்கொள்வதாக வடிவம் கொடுத்திருப்பது தமிழ் மொழியில் மட்டுமே.



Monday, November 12, 2012

முகபத் நபி

அரபு நாட்டின் மக்கா நகரில் கி.பி 571 ஆகஸ்டு 29 ஆம் தேதி அப்துல்லா ஆமினா என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த காலத்தில் அரபு நாடு மட்டுமல்லாமல் ஏனைய பிற நாடுகளும் அஞ்ஞான மென்னும் அந்தகாரத்தில் அதிகம் ஆழ்ந்து கிடந்தன என்பதற்கு அப்போது வந்த சரித்திரங்கள் கூறுகிறது.

இதற்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன் யேசு ஆசியாவின் மேற்குப் பகுதியில் பிறந்தார்.

இதற்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன் புத்தர் ஆசியாவின் கிழக்குப் பகுதியில் பிறந்து நல் உபதேசம் கூறினர்.

கி.பி 6 ஆம் நூற்றாண்டில் எல்லா மேற்கு தேசங்களும், கிழக்கு தேசங்களும் நாகரீகத்திலும், ஒழுக்கத்திலும் ஞானப் பிரகாசத்திலும் மிகத் தாழ்ந்து கிடந்தது. இந்நேரத்தில் ஒரு தீர்க்கதரிசி பிறந்து நாட்டை நல்வழிப் படுத்த வேண்டும் என கருத்து நிலவியது. அதை உறுதிபடுத்தும் விதமாக முகம்மது பிறந்தார்.

- அபிதான சிந்தாமணி பக்கம் 1316.

நரகாசுரன்

வராக உருவம் கொண்ட விஷ்ணுவிற்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன் இந்த நரகாசுரன். இவன் ஆண்ட பட்டணம் பிராக்சோதிஷம். இவன் அரசவையில் மந்திரிகளாக இருந்தவர்கள் அயக்கிரீவன், பஞ்சசன், நிசும்பன், பிராபணன் மற்றும் முரன் ஆகியோர்.

இவன் துவஷ்டாவின் குமரியாகிய கசேரு என்பவளை யானை உருவம் கொண்டு சிறை கொண்டான்.

இவன் அதிதியின் காதணியையும், வருணன் குடையினையும் கவர்ந்தமையால் விஷ்ணுமூர்த்தி கிருஷ்ணாவதாரத்தில் இவனிடம் போர் புரிந்து கொலை செய்து இவன் செல்வங்களையும், காதணியையும் மற்றும் மணிமாலையையும் பரித்தனர்.

- அபிதான சிந்தாமணி பக்கம் 934.

இதைத்தான் தீபாவளியாக கொண்டாடுகிறோமா ?

The Religion of Valluvar

The genius of Tiruvalluvar consists in having produced a treatise on pure ethics which is the common property of all religions in the world. The moral code that has been presented to us contains gems which would serve the world for all time to come. The maxims promulgated are of such (universal application that they have evoked wide appreciation and approval as is seen from English and Latin translations of the book. The Rural which claims an age of 2,000 years and more is still young and will be young, for it has been written for practical application for all time and in all places. The beauty of the work lies in its catering to the needs and desires of all religionists and creeds. Despite any serious and detailed study with regard to the religion of Valluvar, it is difficult to arrive at some definite conclusion. Rather we are compelled to go back to where we started and to remain in a state of doubt as to the personal religion of the celebrated author. For, every religion including Christianity claims him. 

Was he a Christian? 

The followers of Christianity identify, without any justification whatever, Elelasinga with the apostle St. Thomas, and as Elela is said to be the patron of the poet-moralist, it may be that Valluvar also embraced the same creed. European Tamil scholars of the last century like Fr . Beschi and Pope were specially attracted by that incomparable ethical code and rendered it in European languages, Latin and English. It may be noted in passing that these scholars were mainly Christian ecclesiastics. 

Was he a Jaina? 

It is again argued that he was a Jaina. The epithets Malarmisaiyekinan (மலர்மிசையேகினான்), aindavittan (ஐந்தவித்தான்) aravdliyantanan (அறவாழி அந்தணன்) are generally interpreted as denoting the Arhat and the philosophical ideas of the arhats. The references to Indra and the doctrine of ahimsa are also urged in support of the same theory. How slippery is the foundation of this theory can be gauged from the follow- ing. The expression malarmisai yekinan which means, 'He who stands in the human heart is nothing more than the grand idea expressed in the Bhagavadgita that the Lord God is seated in the heart of all creatures. The aindavittan is a common idea of the Hindus that he who conquered his five senses could become a yogin, and attain godhood. The term amvaliyantanan may mean the law-giver, the law-administrator, or the law- maker. Again, the cult of Indra-worship is again common to all sects of Hinduism including Buddhism and Jainism. In fact Indra is one of the principal Vedic deities invoked in the sacred yajnas. The doctrine of ahimsa does not belong only to the Jain cult. It is a fundamental doctrine of the Upanisads, the philosophical sections of the Vedic literature. As Parimelalagar points out, we have to interpret his sayings broadly, and not narrow them down as a sectarian work. At the least it is not possible to make out a strong case for its sectarian character. 

Was he a Buddhist? 

That he was also a votary of Buddhism is again claimed by some scholars whose chief argument is based on the section entitled turavu (துறவு). The Kural (348)


தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்



is specially quoted as prescribing renunciation as the cure for all ills (துறவறம்). A corroborative clue is said to be afforded by the expression of the same ideas in the Manimekalai. But renunciation is the ideal preached in all creeds. For example, the same Kural is quoted as ex- pounding a concept of Saiva Siddhanta.

Was he a Vaisnavite? 

That he embraced the Vaisnava creed and was a devotee of Vishnu is proved by the first kural venba which finds a parallel in the Githa where the Lord says that He was the first letter (qr) among the letters. 6 In another informing hural-venba more light is thrown on this topic. There is a distinct reference to the Vaikuntha as the abode of Tamaraik-kannan literally the lotus-eyed. The idea in this kural-venba is that righteous people, after death find their home in the abode of Visnu who is said to be the lotus-eyed. Life after death in Vaikuntha is clearly the Vaisnava idea and this, when compared with the first verse of prayer with which the Kural opens, may lend weight to the view that he was a follower of Vaisnavism. 

Was he a Saiva? 

There are again some kural venbas which go to demonstrate that the author was a Saiva by religion. The phrase Engunathaan (எண்குணத்தான்) is generally quoted to show his adherence to Saivism. It is significant to note that Saiva saints like Appar and Sundaramurti use the very term in their laudatory stanzas on Siva. Engunathaan simply means the God with eight attributes. Again the kttral-venba (359)


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் 
சார்தரா சார்தரு நோய்.


is believed to be the Saiva idea as it has been utilized in an accredited &aiva Siddhanta work with approval. To this may be added the kural- venba (348) which has been fused in another Saiva Siddhanta work as we have seen already.

Conclusion. 

The examination of the personal religion of Valluvar does not give us any definite lead in the matter. The fact seems to be that the author, whatever his personal religion, did not wish to give his work a sectarian character. If we can hazard a conjecture, Valluvar who was acquainted with different creeds and faiths, took up the best in every creed and thus primarily intended to be a moralist rather than a religious teacher. 

The Rural is like the Bhagavadhgitha which appeals to every faith, and which admits of any interpretation looked at from any point of view. In fact it is the correct estimate of poet Kalladanar who says 'Among the six religious creeds, the followers of one creed will assert that there is only one eternal thing. The follow- ers of a second creed will speak of another thing. The followers of the third creed will speak of yet another. But it is good that the followers of all creeds accept the pronounced prescriptions of Valluvar's muppal. 


ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் 
அன்றென்ப ஆறு சமயத்தால் - நன்றென 
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார் 
முப்பால் மொழிந்த மொழி - திருவள்ளுவமாலை.


As has been already indicated, if Parimelalagar's views could be adopted, then the author of the Kural must have been familiar with Sanskrit literature and especially the Dharmasastra and the Arthasastra literature. If this position can be accepted, it is reasonable to assume that Tiruvalluvar follows mainly in his Arathuppal the most popular Dharmasastra of Manu, in his Porutpal the well- known Arthasasthra of Kautalya, and in his Kamathuppal the Kamasutra of Vatsyayana. To these may be added portions of the Ramayana and the Mahabharata and other allied literature. Whether Valluvar's muppal is an in- dependent growth or is indebted to Sanskrit literature, it is for future research to determine conclusively. 

As it is, there is a remarkable parallelism between the Kural and the Sanskrit books above referred to. We propose in the following pages to give a list of such of the Kural- venbas which have a striking correspondence with those in the Sanskrit works devoted to subjects like Dharma, Artha and Kama. This list does not, however, pretend to exhaust all the corresponding references.

குமாரக் கடவுள்

சிவ பெருமான் யோகத்தில் இருந்து எழும்போது தேவர்களின் வேண்டுகோளால் தன் நெற்றியில் இருந்து ஆறு தீப்பொறிகளை கங்கையில் விட்டார். கங்கை இதன் வெப்பம் தாங்காமல் சரவணப் பொய்கையிலிட்டாள். இந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாயின. பின் கிருத்திகை முதல் ஆறு பெண்கள் பாலூட்ட வளர்ந்து உமாதேவியின் அருளால் ஆறுமுகங்களும் 12 கைகளுமாய் உருவானது.

முழுதும் உணரும் அறிவு, அளவோட இன்பம், வரம்பிலா ஆற்றல், தன்வய முடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்களை குறிக்கும் ஆறுமுகம்.

இவரது ஆயுதம் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல் ஆக பன்னிரெண்டாகும்.



Sunday, November 11, 2012

வரலாறு

கி. மு. 9000 இருந்து :

தலைச்சங்கம் அதாவது முதல் தமிழ் சங்கம்  தென்மதுரையில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. இன்று வரை உண்மையான காலம் எதுவென்று உறுதியாக சொல்ல வேறு குறிப்புகள் இல்லை.

அகத்தியர் எழுதிய அகத்தியம் இந்த காலகட்டத்தில் தான் என்ற கருத்து உண்டு. பின் கடல் சீற்றத்தால் பெறுவாரியான நிலப்பரப்பு அழிந்து போனதாக இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கிறது.


கி. மு 2387 - கி.மு 306

இடைச்சங்கம் ஏறைக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புற்று இருந்த தமிழ்ச் சங்கம் என்று மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. இதுவும் கடல் சீற்றத்தால் அழிந்து போனது.

ஒரு குறிப்பில் கி.மு 3000 ல் மகாபாரதப் போர் நடந்தேறியது என குறிப்புகள் உள்ளது.

மற்றொரு குறிப்பில் கி.மு 1400 ல் நடந்தது எனவும், போர் நடந்த 18 நாட்களும் இவ்விரு செனைகளுக்கும் உணவளித்தவன் சேரலாதன் எனவும் மன்னனிடம் இருந்த புலவன் முடிநாகராயர் கூறியிருக்கிறார். சோழ மன்னன் ஒருவன் பாரதப் போர் முடியும் வரை தருமனுக்கு உதவினான் என கலிங்கத்துப் பரணியில் சொல்லப் பட்டுள்ளது. அர்ச்சுணன் ஒரு பாண்டியன் மகளை மணந்தான் என பாரதம் கூறுகிறது. சகாதேவன் தெற்கே சென்று பாண்டியர்களை வென்றான் என்று சபாபர்வம் கூறுகிறது.(அபிதான சிந்தாமணி)


கி.மு 1500 - கி.மு 500

இந்த காலகட்டத்தில் தான் ரிக், யசுர், சாம மற்றும் அதர்வன  வேதம் தொகுக்கப் பட்டிருப்பதாக கருத்து உள்ளது. ரிக் வேதங்களில் இயற்கையை தெய்வமாக வழிபட்டதாக குறிப்பு உள்ளது.


கி.மு 700 - கி.மு 100

இந்த காலகட்டத்தில் தான் நான்கு கட்ட உபநிடதங்கள் உருவாகியதாக சொல்லப் பட்டிருக்கிறது.


கி.மு 300 - கி.பி 300

தொல்காப்பியம், திருக்குறள் இந்த காலகட்டத்தில் தொன்றியது.  கடைச்சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது.

தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதமும், இராமாயணமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.


கி.பி. 300 - கி.பி. 600

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் முருகக் கடவுளை வழிபட்டதாக கூறப்படுகிறது.

கி.பி 250 - கி.பி 850

பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்.

கி.பி 1155 - கி.பி 1162

இந்த சமயத்தில் தான் கம்பர் தனது இராமயணத்தை இயற்றினார். களப்பிரர்கள் ஆட்சிக்குப் பின் தமிழனின் கலாச்சாரத்தையும், பன்பாட்டையும் எடுத்துரைக்க கம்பர் வால்மீகியின் இராமாயணத்தை எடுத்து தன் கவித்திறமையால் மாற்றிக் கொடுத்தவர் கம்பர்.


Academies(B.C. 10,150 to 150) - Period of the three Tamil (Academic).
200 years. After the destruction of the third Sangam when the Tamil literature was not patronized (B. C. 150—A. D. 50).
300 years. When Chintamani, Nannul, Virasoliyam and other Jain works were written (A. D. 50— 350).
800 years. In this period (Puranic). Puranas, Naishada, Rama- yana and other works of that kind were written (A. D. 350 —1150),
700 years. When the Saiva (Monastic), monks of Tiruvaduturai and other places encouraged. the study of Tamil literature (A. D. 1150—1850)


Wednesday, November 7, 2012

கொன்றால் பாவம் தின்றால் போச்சு


நவம்பர் 07,2012

//மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். லெக்பீசை வாயில் வைக்கும்போது, இதையும் கொஞ்சம் மனசுலே வச்சுக்கிடுங்க! இந்த விளக்கத்தைச் சொன்னது யார் தெரியுமா? வாரியார் சுவாமிகள்...! //

என்னைப் பொருத்தவரை சொர்க்கம் நரகம் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் எங்கே இருக்கிறேனோ அந்த இடத்தை சொர்க்கமாக மாற்றுகிறேன். நரகத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.

அது நடந்தாலும் சந்தோசமா இருக்கனும். விதின்னு சொல்லக் கூடாது. விதி என்பது நாம் செய்த காரியங்களினால் (நல்லதோ,கெட்டதோ) ஏற்படும் பின் விளைவுகள்.

மகிழ்ச்சியா இருக்கனும். தன்னை சார்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துனும். சொர்க்கம் நம் காலடியில் இருக்கும்.

இரண்டு உயிர் சந்தோசமா இருந்த போது நாம உருவானோம். அதே சந்தோசத்தை வாழ்க்கையின் கடைசி வரை அனுபவிப்போம். 

ஒரு மதத்தில் மாமிசம் சாப்பிடலாம் மது அருந்தலாம்னு சொல்றாங்க. வேற மதத்தில அது தப்புன்னு சொல்றாங்க.  

எல்லா விசயமுமே அப்படித்தான். ஒன்றில் ஏற்றுக்கொள்ளப் பட்டது இன்னொன்றில் மறுக்கப் பட்டிருக்கிறது. அதனால் இத்தனை மதங்களும் கடவுள்களும்.

அதனால் உங்களுக்கு உங்கள் மனதிற்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள்.



பரப்பிரம்மம்

ஒரு தாயின் கருப்பையில் உருவாகும் சிசு தான் பரப்பிரம்ம சொரூபம். ஒரு ஆணும் பெண்ணும் இணையும் போது பரப்பிரம்மம் உருவாகிறது. ஆணின் விந்து வெள்ளையாகவும், பெண்ணின் அண்டம் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதைத்தான் கோவிலைச் சுற்றியுள்ள சுவற்றில் சிவப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் அடித்து மறைமுகமாக சொல்லியிருப்பார்கள்.

முதன் முதலாக உருவான இந்த சொரூபம் ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இரண்டும் கலந்து காணப்படுகிறது. இது ஒரு அமைதி நிலை. சாந்த நிலை. ஆணும் பெண்ணுமாக இருக்கும் இந்த நிலை கோவில் கற்பகிரகத்தை விடவும், யாகபீடத்தை விடவும் மேன்மையானது. இது சிவலிங்க வடிவில் மேல்பாகத்தின் தோற்றத்தில் இருக்கும். தோன்றிய ஏழு நாட்களுக்குள் இந்த கரு ஆணாகவோ பெண்ணாகவோ உருமாற வேண்டிய கட்டாயம். ஆணாக மாறினால் அதற்கேற்ற வகையில் வளர்ச்சி பெறும். பெண்ணாக உருவெடுத்தால் அதற்கு உண்டான உடல் அமைப்பும் குண நலன்களோடும் வளரும். ஆக அமைதியை சாந்தத்தை இழந்து வளர வேண்டிய சூழ்நிலை.

கருப்பையில் இருந்து வெளியே வரும் உயிர் பின் நாளில் ஆணாக இருந்தால் பெண்ணையும், பெண்ணாக இருந்தால் ஆணையும் திருமணம் என்ற பெயரில் இணைத்துவைக்கிறார்கள். இந்த இரு உயிர்கள் இணையும் நேரத்திற்கு சாந்தி எனப்பெயரிட்டனர். சாந்தத்தை இழந்த இரு உயிர்களை திருமணம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயரில் மீண்டும் அதை அடைகிறோம்.

இந்த நிலையில் பெண்ணிற்கு வரதட்சனை என்ற பெயரில் பெண்ணைப் பெற்றோர் ஏகப்பட்ட நகைகள், பட்டு சேலை கொண்டு அலங்கரித்து அனுப்புகின்றனர். ஆனால் இதையெல்லாம் இழந்த நேரத்தில் தான் ஆணும் பெண்ணும் இணைகிறார்கள்.

இவ்வாறு பரபிம்ம நிலையில் இருந்து பிரிந்த உயிர் பின் இணைந்து இன்னொரு பரபிரம்மத்தை உருவாக்குகிறார்கள். இந்த சுழற்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இது தான் வாழ்க்கையின் தத்துவம்.

நாள், மாதம் மற்றும் வருடம்

நாட்களை குறிப்பதும், வருடங்களை குறிப்பதும் ஏன் தமிழில் இல்லை ?

அமாவாசை யிலிருந்து அல்லது பவுர்ணமி வரை இருக்கும் நாட்களை குறிக்க சமஸ்கிருதத்தில் பெயரிட்டிருக்கிறார்கள். அவை பவுர்ணமி, துவிதை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி மற்றும் சதுர்த்தசி.

ஒவ்வொரு பெயருக்கும் நம் வாழ்வில் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விசயங்களை சம்பந்தப்படுத்தி எடுத்துக் காட்டாக சொல்கிறார்கள். அப்படின்னா ஏன் தமிழில் இல்லை ? கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் ஏனைய மொழி பேசும் மக்களிடம் அவர்கள் மொழியிலேயே வருடங்களின் பெயர்கள் உள்ளன. தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை.

அறுபது வருடங்களின் பெயர்களைப் பார்த்தால் அவற்றிலும் தமிழ் இல்லை. நல்லவேளை மாதங்களின் பெயர்கள் தமிழில் இருப்பதால் மகிழ்ச்சியா இருக்கிறது.

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்ப,ஆங்கீரசு,சிறீமுக,பவ,யுவ,தாது,ஈசுர,வெகுதானிய,பிரமாதி,விக்கிரம,விசு,சித்திரபானு,சுபானு,ததூரண,பார்த்திப,விய,சர்வசித்து,சர்வதாரி,விரோதி,விகிர்த்தி,கர,நந்தன,விஜய,ஜய,மன்மத,துர்முகி,ஏவிளம்பி
விளம்பி,விகாரி,சார்வரி,பிலவ,சுபகிருது,சோபகிருது,குரோதி,விசுவாசு,பராபவ,பிலவங்க,கீலக,சௌமிய,சாதாரண,விரோதிகிருது,பரிதாபி,பிரமாதீச,ஆனந்த,இராட்சத,நள,பிங்கள,காலயுக்தி,சித்தார்த்தி,ரௌத்திரி,துர்மதி,துந்துபி,ருதிரோற்,ரத்தாட்சி,குரோதன மற்றும் அட்சய.


சம(ஸ்கிருதப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்
விபவ -உயர்தோன்றல்
சுக்கில-வெள்ளொளி
பிரமோதூத-பேருவகை
பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்
ஆங்கீரச-அயல்முனி
சிறிமுக-திருமுகம்
பவ- தோற்றம்
யுவ-இளமை
தாது-மாழை
ஈசுவர-ஈச்சுரம்
வெகுதானிய-கூலவளம்
பிரமாதி-முன்மை
விக்ரம-நேர்நிரல்
விச-விளைபயன்
சித்திரபானு-ஓவியக்கதிர்
சுபானு-நற்கதிர்
தாரண-தாங்கெழில்
பார்த்திப-நிலவரையன்
விய-விரிமாண்பு
சர்வசித்த-முற்றறிவு
சர்வதாரி-முழுநிறைவு
விரோதி- தீர்பகை
விகிர்தி-வளமாற்றம்
கர-செய்நேர்த்தி
நந்தன-நற்குழவி
விசய-உயர்வாகை
சய-வாகை
மன்மத-காதன்மை
துன்முகி-வெம்முகம்
ஏவிளம்பி-பொற்றடை
விளம்பி-அட்டி
விகாரி-எழில்மாறல்
சார்வரி-வீறியெழல்
பிலவ-கீழறை
சுபகிருது-நற்செய்கை
சோபகிருது-மங்கலம்
குரோதி-பகைக்கேடு
விசுவாவசு-உலகநிறைவு
பராபவ-அருட்டோற்றம்
பிலவங்க-நச்சுப்புழை
கீலக-பிணைவிரகு
சவுமிய-அழகு
சாதாரண-பொதுநிலை
விரோதி கிருது-இகல்வீறு
பரிதாபி-கழிவிரக்கம்
பிரமாதீச-நற்றலைமை
ஆனந்த-பெருமகிழ்ச்சி
இராட்சச-பெருமறம்
நள- தாமரை
பீங்கள-பொன்மை
காளயுக்தி-கருமைவீச்சு
சித்தார்த்தி-முன்னியமுடிதல்
ரவுத்ரி-அழலி
துன்மதி-கொடுமதி
துந்துபி-பேரிகை
உருத்ரோத்காரி-ஒடுங்கி
இரக்தாட்சி-செம்மை
குரோதன்-எதிரேற்றம்
அட்சய-வளங்கலன்


ஒருமுறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் மட்டும் அறுபதினாயுரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கோபிகை கொடுக்க கூடாதா என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி எந்த வீட்டில் நான் இல்லையோ அந்த வீட்டுப் பெண்ணை எடுத்துக்கொள் என்றார். உடனே நாரத முனிவர் அறுவதினாயிரம் வீட்டிலும் தேட எல்லா வீட்டிலும் கிருஷ்ணமூர்த்தி இருப்பது கண்டு மீண்டும் கிருஷ்ணமூர்த்தி வந்து முறையிட்டார்.

பின் கிருஷ்ணமூர்த்தியின் மேனியின் மேல் மையல் கொண்டு யமுனை ஆற்றின் கரையில் தவமிருந்து ஒரு பெண்ணாக உருவம் கொண்டார். இவளுடன் கிருஷ்ணமூர்த்தி அறுபது வருஷம் தாம்பத்ய உறவு கொண்டு அறுபது குமாரரைப் பெற்றார். இவர்களின் பெயர்கள் தான் இந்த 60 வருஷம்.

இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் தமிழன் எதைப் பற்றியும் கவலைப் படாமல்  வாழ்ந்திருக்கிறான். தனக்கென ஒரு வழி அமைத்து நாட்களையும், மாதங்களையும், காலங்களையும் வகைப்படுத்தி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். எல்லா தமிழ் இலக்கியங்களில் தை மாதத்தின் குறிப்புகள் அதிகமாக காணப்படுவதாலும், அந்த மாதமே விளைச்சலுக்கு ஏற்ற மாதமாகவும் இருப்பதால் அதுவே தமிழனின் வருடப் பிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. இருந்தாலும் சித்திரை மாதத்தை இவ்வளவு வருடங்களாக ஏன் கொண்டாடி வருகிறோம் என்று கண்டு பிடித்தால் சந்தேகம் தெளிவடைய வாய்ப்புள்ளது.


- அபிதான சிந்தாமணி பக்கம் 1392.

Monday, November 5, 2012

படித்தவன் - படிக்காதவன்

படித்தவன் பாடம் நடத்துகிறான்,
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்.

உயரம்

தண்ணீரின் உயரத்தைப் பொருத்தது தாமரை மலரின் உயரம்.
மனிதனின் எண்ணங்களின் உயரத்தைப் பொருத்தது அவன் வாழ்க்கையின் உயரம்.

Friday, November 2, 2012

மனிதன், மதம் மற்றும் தெய்வம்

மனுசன் மதங்களை படைத்தான்.. மதங்களோ தெய்வங்களை படைத்தது..
மனுசனும் மதங்களும் தெய்வங்களும் கூடி - இந்த
மண்ணை கூறு போட்டான். அதோடு தம்
மனசையும் கூறு போட்டான்

இந்துவானான், முஸ்லிமானான், கிருத்துவன் என்றான் - கடைசியில்
தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியாதவனானான்.
இந்த நாட்டையே பைத்தியகாரத் தலமாக்கிவிட்டான்.
ஆயிரமாயிரம் மனித இதயங்களை ஆயுத கிடங்குகளாகிவிட்டான்.

தெய்வம் தெருவில் தினமும் செத்துமடிகிறது. அதைப்பார்த்து சாத்தான் சிரிக்கிறது.


உண்மை எங்கே ? எழில்கொஞ்சும் அழகெங்கே ? - கடைசியில்
நம் சுதந்திரம் தான் எங்கே ? நம் இரத்த பந்தங்கள் எங்கே ?
மறையாத அன்புகொண்ட நெஞ்சங்கள் எங்கே ?
ஆயிரம் யுகங்களில் வரும் அவதாரங்கள் எங்கே ?

மனுசன் தெருவில் தினமும் செத்துமடிகிறான். அதைப்பார்த்து மதங்கள் சிரிக்கிறது.

Thursday, November 1, 2012

கம்பனின் கவித்திறமை


சீதையின் நடை அழகை வர்ணிக்கும் கம்பன் பாடல்.

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.

அதே கம்பன் சூர்ப்பனகையின் நடையை வர்ணிக்கிறான்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

கம்பனின் கவித்திறமையை இந்த இரு பாடலில் பார்க்கலாம். சீதையை வர்ணிக்கும் போது எந்த குலுங்கலும் இல்லாமல் வரும் பாடல் சூர்ப்பனகையை வர்ணிக்கும் போது குலுங்குகிறது.  "அனுங்க" னு குலுங்குவது ரொம்ப அழகு.

சீதை நடந்தாள். அழகாக இருந்தது.
சூர்ப்பனகை அழகாக நடந்தாள்.

காமாக்யா கோவில் - அஸ்ஸாம்

இந்து மதத்தில் ஆறு பிரிவுகளாக கடவுளை வணங்குகிறார்கள். அவை காணபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம், சைவம் மற்றும் வைணவம். இதில் சக்தியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் பிரிவில் வரும் கோவில் தான் அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவில். அதிலும் சக்தியை வழிபடும் தலங்களில் முதல் தலமாக இதுவே கருதப் படுகிறது.

இங்கே மக்கள் வழிபடுவது பெண்களின் யோனி வடிவப் பாறையே ஆகும்.