சூரியனின் மனைவியின் பெயர் சஞ்ஞிகை. இவள் சூரியனின் தேகத்தின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். இவர்களுக்கு பிரஜாபதி மற்றும் யமனும் யமுனை என்னும் இரட்டைப் பெண்குழந்தைகள் உண்டு.
ஒருமுறை சஞ்ஞிகை தன் தந்தையை காணும் பொருட்டு செல்லும் போது தன்னைப் போல இன்னொரு பெண்ணை உருவாக்கி சாயாதேவி என்று பெயரிட்டாள்.
கிளம்பும் போது சாயதேவியிடம் தன் கணவனுக்கு சந்தேகம் வராதபடி எல்லா சுகத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் தன் குழந்தைகளையும் பேணிகாக்க வேண்டும் எனவும் வேண்டினாள். சாயாதேவியும் சரி என் ஏற்றுக் கொண்டாள்.
இருந்தாலும் சக்களத்தி என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் துன்புறுத்தினாள். இதேவேளை கணவனிடம் சொல்லாமல் வந்த மகளை நீ ஒரு பெண் குதிரையாக கடவாய் என சாபமிட்டு அனுப்பினான் சஞ்ஞிகையின் தந்தை.
மூத்தவள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை காணமுடியாத யமன் கோபித்து அவளை காலால் உதைக்க அதற்கு சாயதேவி உன் கால் புழுக்கக் கடவது என சாபமிட்டாள். யமன் இதை தனது தந்தை சூரியனிடம் தெரிவித்தான். தாயின் சாபம் நீக்கலாகாது எனக்கூறி சாயாதேவியிடம் காரணம் கேட்க அவள் தன் சுயரூபம் பற்றி சொன்னாள்.
இதைக்கண்டு கோபமுற்ற சூரியன் சஞ்ஞிகையின் தந்தையிடம் முறையிட்டான். அவர் அமைதிகொண்டால் தக்க யோசனை கூறுவதாக சொல்ல அதற்கு சம்மதித்தான். உனது தேக வெப்பம் தாங்க முடியாததால் அவள் இங்கு வர என்னால் குதிரை உருவம் கொண்டு உத்திரகுரு காட்டில் இருக்கிறாள் என்றான்.
சூரியனையும் தேக வெப்பத்தை குறைத்து கூடி மகிழ வசதியாக உருவம் பெற்று பின் அவனும் குதிரை உருவம் கொண்டு சஞ்ஞிகையுடன் கூடி வாழ்ந்தான். அப்போது மூக்கின் வழியே வீரியம் வெளிப்பட்டு அதனால் அஸ்வினி தேவதைகள் பிறந்தனர். (பிரம புராணம்)
ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 722 - 723.