Wednesday, November 7, 2012

பரப்பிரம்மம்

ஒரு தாயின் கருப்பையில் உருவாகும் சிசு தான் பரப்பிரம்ம சொரூபம். ஒரு ஆணும் பெண்ணும் இணையும் போது பரப்பிரம்மம் உருவாகிறது. ஆணின் விந்து வெள்ளையாகவும், பெண்ணின் அண்டம் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதைத்தான் கோவிலைச் சுற்றியுள்ள சுவற்றில் சிவப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் அடித்து மறைமுகமாக சொல்லியிருப்பார்கள்.

முதன் முதலாக உருவான இந்த சொரூபம் ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இரண்டும் கலந்து காணப்படுகிறது. இது ஒரு அமைதி நிலை. சாந்த நிலை. ஆணும் பெண்ணுமாக இருக்கும் இந்த நிலை கோவில் கற்பகிரகத்தை விடவும், யாகபீடத்தை விடவும் மேன்மையானது. இது சிவலிங்க வடிவில் மேல்பாகத்தின் தோற்றத்தில் இருக்கும். தோன்றிய ஏழு நாட்களுக்குள் இந்த கரு ஆணாகவோ பெண்ணாகவோ உருமாற வேண்டிய கட்டாயம். ஆணாக மாறினால் அதற்கேற்ற வகையில் வளர்ச்சி பெறும். பெண்ணாக உருவெடுத்தால் அதற்கு உண்டான உடல் அமைப்பும் குண நலன்களோடும் வளரும். ஆக அமைதியை சாந்தத்தை இழந்து வளர வேண்டிய சூழ்நிலை.

கருப்பையில் இருந்து வெளியே வரும் உயிர் பின் நாளில் ஆணாக இருந்தால் பெண்ணையும், பெண்ணாக இருந்தால் ஆணையும் திருமணம் என்ற பெயரில் இணைத்துவைக்கிறார்கள். இந்த இரு உயிர்கள் இணையும் நேரத்திற்கு சாந்தி எனப்பெயரிட்டனர். சாந்தத்தை இழந்த இரு உயிர்களை திருமணம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயரில் மீண்டும் அதை அடைகிறோம்.

இந்த நிலையில் பெண்ணிற்கு வரதட்சனை என்ற பெயரில் பெண்ணைப் பெற்றோர் ஏகப்பட்ட நகைகள், பட்டு சேலை கொண்டு அலங்கரித்து அனுப்புகின்றனர். ஆனால் இதையெல்லாம் இழந்த நேரத்தில் தான் ஆணும் பெண்ணும் இணைகிறார்கள்.

இவ்வாறு பரபிம்ம நிலையில் இருந்து பிரிந்த உயிர் பின் இணைந்து இன்னொரு பரபிரம்மத்தை உருவாக்குகிறார்கள். இந்த சுழற்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இது தான் வாழ்க்கையின் தத்துவம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.