நவம்பர்
07,2012
//மாமிசம் சாப்பிடுபவர்கள்
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்
கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
மாமிசம் உண்பவர்கள்
இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது
சதையை அறுத்து, பூலோகத்தில்
இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு
என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே தீர
வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். இதைத்தான்
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். லெக்பீசை வாயில் வைக்கும்போது,
இதையும் கொஞ்சம்
மனசுலே வச்சுக்கிடுங்க! இந்த விளக்கத்தைச் சொன்னது யார் தெரியுமா?
வாரியார்
சுவாமிகள்...! //
என்னைப் பொருத்தவரை சொர்க்கம் நரகம் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் எங்கே இருக்கிறேனோ அந்த இடத்தை
சொர்க்கமாக மாற்றுகிறேன். நரகத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.
அது நடந்தாலும்
சந்தோசமா இருக்கனும். விதின்னு சொல்லக் கூடாது. விதி என்பது நாம் செய்த காரியங்களினால் (நல்லதோ,கெட்டதோ)
ஏற்படும் பின் விளைவுகள்.
மகிழ்ச்சியா
இருக்கனும். தன்னை சார்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துனும். சொர்க்கம் நம் காலடியில்
இருக்கும்.
இரண்டு உயிர் சந்தோசமா இருந்த போது நாம உருவானோம். அதே சந்தோசத்தை வாழ்க்கையின் கடைசி வரை அனுபவிப்போம்.
இரண்டு உயிர் சந்தோசமா இருந்த போது நாம உருவானோம். அதே சந்தோசத்தை வாழ்க்கையின் கடைசி வரை அனுபவிப்போம்.
ஒரு மதத்தில் மாமிசம் சாப்பிடலாம் மது அருந்தலாம்னு சொல்றாங்க. வேற
மதத்தில அது தப்புன்னு சொல்றாங்க.
எல்லா விசயமுமே அப்படித்தான். ஒன்றில் ஏற்றுக்கொள்ளப் பட்டது
இன்னொன்றில் மறுக்கப் பட்டிருக்கிறது. அதனால் இத்தனை மதங்களும் கடவுள்களும்.
அதனால் உங்களுக்கு உங்கள் மனதிற்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.