சீதையின் நடை அழகை வர்ணிக்கும் கம்பன் பாடல்.
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.
அதே கம்பன் சூர்ப்பனகையின் நடையை வர்ணிக்கிறான்.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
கம்பனின் கவித்திறமையை இந்த இரு பாடலில் பார்க்கலாம். சீதையை வர்ணிக்கும் போது எந்த குலுங்கலும் இல்லாமல் வரும் பாடல் சூர்ப்பனகையை வர்ணிக்கும் போது குலுங்குகிறது. "அனுங்க" னு குலுங்குவது ரொம்ப அழகு.
சீதை நடந்தாள். அழகாக இருந்தது.
சூர்ப்பனகை அழகாக நடந்தாள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.