நாட்களை குறிப்பதும், வருடங்களை குறிப்பதும் ஏன் தமிழில் இல்லை ?
அமாவாசை யிலிருந்து அல்லது பவுர்ணமி வரை இருக்கும் நாட்களை குறிக்க சமஸ்கிருதத்தில் பெயரிட்டிருக்கிறார்கள். அவை பவுர்ணமி, துவிதை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி மற்றும் சதுர்த்தசி.
ஒவ்வொரு பெயருக்கும் நம் வாழ்வில் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விசயங்களை சம்பந்தப்படுத்தி எடுத்துக் காட்டாக சொல்கிறார்கள். அப்படின்னா ஏன் தமிழில் இல்லை ? கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் ஏனைய மொழி பேசும் மக்களிடம் அவர்கள் மொழியிலேயே வருடங்களின் பெயர்கள் உள்ளன. தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை.
அறுபது வருடங்களின் பெயர்களைப் பார்த்தால் அவற்றிலும் தமிழ் இல்லை. நல்லவேளை மாதங்களின் பெயர்கள் தமிழில் இருப்பதால் மகிழ்ச்சியா இருக்கிறது.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்ப,ஆங்கீரசு,சிறீமுக,பவ,யுவ,தாது,ஈசுர,வெகுதானிய,பிரமாதி,விக்கிரம,விசு,சித்திரபானு,சுபானு,ததூரண,பார்த்திப,விய,சர்வசித்து,சர்வதாரி,விரோதி,விகிர்த்தி,கர,நந்தன,விஜய,ஜய,மன்மத,துர்முகி,ஏவிளம்பி
விளம்பி,விகாரி,சார்வரி,பிலவ,சுபகிருது,சோபகிருது,குரோதி,விசுவாசு,பராபவ,பிலவங்க,கீலக,சௌமிய,சாதாரண,விரோதிகிருது,பரிதாபி,பிரமாதீச,ஆனந்த,இராட்சத,நள,பிங்கள,காலயுக்தி,சித்தார்த்தி,ரௌத்திரி,துர்மதி,துந்துபி,ருதிரோற்,ரத்தாட்சி,குரோதன மற்றும் அட்சய.
சம(ஸ்கிருதப் பெயர் -தமிழ்ப் பெயர்
பிரபவ -நற்றோன்றல்
விபவ -உயர்தோன்றல்
சுக்கில-வெள்ளொளி
பிரமோதூத-பேருவகை
பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்
ஆங்கீரச-அயல்முனி
சிறிமுக-திருமுகம்
பவ- தோற்றம்
யுவ-இளமை
தாது-மாழை
ஈசுவர-ஈச்சுரம்
வெகுதானிய-கூலவளம்
பிரமாதி-முன்மை
விக்ரம-நேர்நிரல்
விச-விளைபயன்
சித்திரபானு-ஓவியக்கதிர்
சுபானு-நற்கதிர்
தாரண-தாங்கெழில்
பார்த்திப-நிலவரையன்
விய-விரிமாண்பு
சர்வசித்த-முற்றறிவு
சர்வதாரி-முழுநிறைவு
விரோதி- தீர்பகை
விகிர்தி-வளமாற்றம்
கர-செய்நேர்த்தி
நந்தன-நற்குழவி
விசய-உயர்வாகை
சய-வாகை
மன்மத-காதன்மை
துன்முகி-வெம்முகம்
ஏவிளம்பி-பொற்றடை
விளம்பி-அட்டி
விகாரி-எழில்மாறல்
சார்வரி-வீறியெழல்
பிலவ-கீழறை
சுபகிருது-நற்செய்கை
சோபகிருது-மங்கலம்
குரோதி-பகைக்கேடு
விசுவாவசு-உலகநிறைவு
பராபவ-அருட்டோற்றம்
பிலவங்க-நச்சுப்புழை
கீலக-பிணைவிரகு
சவுமிய-அழகு
சாதாரண-பொதுநிலை
விரோதி கிருது-இகல்வீறு
பரிதாபி-கழிவிரக்கம்
பிரமாதீச-நற்றலைமை
ஆனந்த-பெருமகிழ்ச்சி
இராட்சச-பெருமறம்
நள- தாமரை
பீங்கள-பொன்மை
காளயுக்தி-கருமைவீச்சு
சித்தார்த்தி-முன்னியமுடிதல்
ரவுத்ரி-அழலி
துன்மதி-கொடுமதி
துந்துபி-பேரிகை
உருத்ரோத்காரி-ஒடுங்கி
இரக்தாட்சி-செம்மை
குரோதன்-எதிரேற்றம்
அட்சய-வளங்கலன்
ஒருமுறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் மட்டும் அறுபதினாயுரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கோபிகை கொடுக்க கூடாதா என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி எந்த வீட்டில் நான் இல்லையோ அந்த வீட்டுப் பெண்ணை எடுத்துக்கொள் என்றார். உடனே நாரத முனிவர் அறுவதினாயிரம் வீட்டிலும் தேட எல்லா வீட்டிலும் கிருஷ்ணமூர்த்தி இருப்பது கண்டு மீண்டும் கிருஷ்ணமூர்த்தி வந்து முறையிட்டார்.
பின் கிருஷ்ணமூர்த்தியின் மேனியின் மேல் மையல் கொண்டு யமுனை ஆற்றின் கரையில் தவமிருந்து ஒரு பெண்ணாக உருவம் கொண்டார். இவளுடன் கிருஷ்ணமூர்த்தி அறுபது வருஷம் தாம்பத்ய உறவு கொண்டு அறுபது குமாரரைப் பெற்றார். இவர்களின் பெயர்கள் தான் இந்த 60 வருஷம்.
இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் தமிழன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வாழ்ந்திருக்கிறான். தனக்கென ஒரு வழி அமைத்து நாட்களையும், மாதங்களையும், காலங்களையும் வகைப்படுத்தி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். எல்லா தமிழ் இலக்கியங்களில் தை மாதத்தின் குறிப்புகள் அதிகமாக காணப்படுவதாலும், அந்த மாதமே விளைச்சலுக்கு ஏற்ற மாதமாகவும் இருப்பதால் அதுவே தமிழனின் வருடப் பிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. இருந்தாலும் சித்திரை மாதத்தை இவ்வளவு வருடங்களாக ஏன் கொண்டாடி வருகிறோம் என்று கண்டு பிடித்தால் சந்தேகம் தெளிவடைய வாய்ப்புள்ளது.
- அபிதான சிந்தாமணி பக்கம் 1392.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.