Sunday, December 9, 2012

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்


திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் பாஞ்சாலியை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. இருவரும் நிறைய விஷயங்கள் பேசியபின், கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் பேசி மகிழ்ந்தார்கள். அப்போது பாஞ்சாலியைப் பார்த்து ஐவருக்கு தேவியாய் எப்படி வாழ்ந்தாய் என ஆண்டாள் கேட்க அதற்கு பாஞ்சாலியின் மனம் சற்றே புண்பட்டது.

ஆண்டாளை நோக்கி ஐவருக்கு தேவி என்று என்னை ஏளனப் படுத்தினாயே நீயும் ஐவரை மணந்து கொள்வாய் என்றாள். பின் பெருமாளை வேண்டி அவனையே அடைய வேண்டும் என விரும்பி ஆண்டாள் தவமிருந்தாள். பாஞ்சாலி இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள், அதனால் அவள் வாக்கு பொய்யாகக் கூடாது என்பதால் ஐவரை மணந்தாள் ஆண்டாள்.

அரங்கன், ஸ்ரீரங்கம்
வடபத்ரசாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்
வடமலைவாளன், திருப்பதி
சோலைமலை அழகன், மதுரை
செண்டலங்காரன், மன்னார்குடி


ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இந்த தகவல் உள்ளது.

"அரங்கன் முதல் பாரில் ஐவரை எய்துவான்
ஐந்துவயதில் பிஞ்சாய்ப் பழுத்த பெண் அமுதம்"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்
சிற்றிலை இழைத்தருள்கவே"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் விருந்து உண்ணச்
சிறுசொறு இழைத்தருள்கவே"

"அரங்கேசன் முதலாம் முதல் ஐவரும் மகிழவே
பாமாலை அருளும் புத்தூர் மடந்தை"


இன்றும் ஆண்டாள் அணிந்த மாலையை மேற்சொன்ன கோவிலுக்கு அனுப்புகிறார்கள்.

- மகாபாரதக் கதைகள், த கோவேந்தன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.