Monday, December 10, 2012

ஒழுக்கமாக வாழ்வது

ஒருவன் தன் தந்தை இறந்து விட்டதால் அவரை மோட்சத்திற்கு அனுப்ப எண்ணினான். இவன் தந்தை மிகவும் மோசமான ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன்.

எத்தனையோ சாஸ்திரிகளையும் மந்திரம் ஓதும் மாந்திரீகர்களையும் அழைத்து வந்து பூஜை செய்தான்.

இதிலும் திருப்தி அடையாதவன் புத்தரை அணுகி தன் தந்தையை மொட்சத்திற்கு அனுப்ப உதவுமாறு வேண்டினான்.

புத்தரோ இரண்டு மண்பானையும், கருங்கல்லும், வெண்ணையும் கொண்டு வா என்றார். ஒரு பானையில் கல்லும், இன்னொன்றில் வெண்ணெயும் போட்டு இந்த குளத்தில் போடச் சொன்னார்.

இவ்வளவு எளிதான விசயமா என்று எண்ணியவன் அவ்வாறே செய்தான். பின் புத்தர் மண்பானையை உடைக்குமாறு சொல்ல அதையும் செய்தான். கல் கீழே செல்ல வெண்ணெய் மேலேயே நின்றது.

இப்போ கல்லே மேலே வா, வெண்ணெயே கீழே போ என்று புத்தர் சொல்லச் சொன்னார். இவன் தனக்குள் புத்தரை பெரிய மகான் என்று நினைத்தோமே இவருக்கு இது கூடவா தெரியாது என்று
நினைத்தவன் புத்தரிடம் கல் எப்படி மேலே வரும் எனக் கேட்டான்.

அதற்கு புத்தர் கேட்டார் இவ்வளவு தெரிந்த நீ உன் தந்தை மட்டும் எப்படி மேலே மோட்சம் செல்வார் ? எவனோ ஒருவன் எதோ மந்திரம் சொன்னா மோட்சம் கிடைக்கும்னு எப்படி நினைத்தாய் ?

இவனுக்கு தெளிவு வந்தது.

ஒழுக்கமாக வாழ்வதுதான் சிறந்தது என்பதை புத்தர் விளக்கினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.