இது புத்தன் சொன்ன வார்த்தைகள்.
ஒருவன் நிறைய கற்றுக்கொண்டு தன்னைவிட அதிகம் கற்றுக்கொண்டவர்கள் இல்லை என்று கர்வத்தோடு இருந்தான். புத்தரைப் பற்றி கேள்விப்பட்டு புத்தரிடம் வந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எனக்கும் கற்றுத்தாருங்கள் என்றான். புத்தரும் சரியெனச் சொல்லி தான் போகும் இடமெல்லாம் அவனையும் அழைத்து சென்றார்.
சில வருடங்கள் ஆன பின் இன்றுவரை இவர் நமக்கு எதுவும் சொல்லித்தரவில்லையே, தனக்கு தெரிந்ததைவிட இவருக்கு ஒன்றும் தெரியாதோ என நினைத்தான்.
ஒரு நாள் புத்தரிடம் வந்து தான் விடைபெறுவதாகவும் தனக்கு கற்றுக்கொள்ள இங்கு எதுவும் இல்லையென்றும் கூறினான். புத்தரும் அப்படியே ஆகட்டும் என்று கூறனார். இவனும் பல யோசனையுடன் புத்தரைப் பார்த்து எதாவது தாங்கள் சொல்ல விரும்புகிறீர்களா என்றான்.
அதற்கு புத்தர் நீ என்னிடம் வரும்போது எல்லாம் கற்றுக்கொண்டுவிட்டோம் இனிமேல் என்ன கற்றுக்கொள்ள இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தாய். இன்றுவரை அப்படிதான் இருக்கிறாய். அதனால் தான் இவ்வளவு வருடம் என்னிடம் இருந்து எதுவும் நீ கற்றுக்கொள்ளவில்லை.
இவன் புத்தரைப் புரிந்து கொண்டான். தன் கர்வத்தையும் தொலைத்தான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.