Saturday, December 1, 2012

சூரபத்மன் - கந்தபுராணம்

பிரம்மனுக்கு தட்சன், காசிபன் என இரு புதல்வர்கள். 

அதில் தட்சன் சிவனை நோக்கி தவம் இருந்து பெரும் வரங்களைப் பெற்றான். பின் தனக்கு பிறந்த மகள் தாட்சாயினியை சிவனுக்கு மணமுடிக்க எண்ணி பின் தரமறுக்க தாட்சாயினி தானே சிவனை நோக்கி தவம் இருந்து அடைந்தாள்.

காசிபனும் சிவனை நோக்கி தவமிருந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். இந்நிலையில் அசூரர் குல தலைவன் சுக்கிரன் தேவர்களை அழிக்க, ஒடுக்க எண்ணம் கொண்டான். இதைச் செய்ய உயர்ந்த குலத்தில் உள்ள பெண்ணுடன் காசிபனை உறவு கொள்ளச் செய்தால் நல்ல பிள்ளைகள் பிறக்கும் என எண்ணி மாயை என்ற பெண்ணை அனுப்பினான்.

காசிபன் தவமிருக்கும் இடத்திற்கு மாயை வந்தாள். காட்டை தன் வலிமையால் ஒரு நந்தனமாக மாற்றினாள். காசிபன் கண் திறந்து பார்க்க எதிரில் ஒரு அழகான பெண் இருக்கக் கண்டு உடனே அவளை அடைய ஆசைகொண்டான். இங்கே ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டிய காசிபன் பெண் ஆசை கொண்டதால் தன் தவ வலிமையை இழந்தான்.

அவளை நெருங்கி இங்கு என்ன செய்கிறாய் எனக் கேட்க அவளும் மன அமைதிக்காக இங்கு வந்தேன் என்றாள்.  உன்மேல் ஆசை கொண்டேன் என்னை ஏற்றுக்கொள் எனச் சொல்ல, அவளும் நான் என்ன வடிவம் எடுக்கிறேனோ அதை நீயும் எடுக்க வேண்டும் என கட்டளையிட்டாள். அதற்கு சம்மதித்தான்.

எல்லா ஆசைகளுடன் முதலில் இருவரும் இணைந்தார்கள். அதில் பிறந்தவன் சூரபத்மன். இதனால் சூரபத்மன் மிகவும் கொடியவனாக பலசாலியாக இருந்தான்.

பின் இரண்டாம் முறை சிங்க வடிவம் கொண்டு இருவரும் இணையும் போது சிங்கமுகன் பிறந்தான். ஆசை சற்றே அடங்கி இணைந்ததால் சிங்கமுகன் நல்லகுணம் பெற்றிருந்தான்.

பின் யானை வடிவம் கொண்டு இணைய தாருகன் பிறந்தான். 

கடைசியாக ஆட்டின் வடிவம் கொண்டு இணைய அஜமுகி பிறந்தாள்.

இவர்கள் நால்வரும் உடனே வளர்ந்தார்கள். பல வருடங்கள் தேவைப்படவில்லை.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.