தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை பிரித்து வைத்து எந்த எழுத்தை எங்கே எப்படி பயன்படுத்துவது என்பதை வாழ்க்கை முறையில் சொல்லியிருக்கிறார்கள்.
வல்லின எழுத்துக்களை வைத்து தாலாட்டு பாடக் கூடாது. குழந்தைகள் பயப்படும்படி இருக்கும் ஒலி கொண்டது வல்லினம்.
க ச ட த ப ற என்று பாடும் போது கடினமான ஒலி ஏற்படும்.
மெல்லினத்திலும் தாலாட்டு பாட கூடாது.
ங, ஞ, ண, ந, ம, ன என்று மூக்கைப் பிடித்துக் கொண்டும் பாடக்கூடாது. குழந்தை அழும் சூழ்நிலை ஏற்படுமாம்.
ஆதலால் இடையினத்தில் வரும் எழுத்துக்களை வைத்து பாடினால் குழந்தை தூங்க இதமான ஒலி ஏற்படும். இது வல்லினத்தளவு பயமுறுத்தாது, மெல்லினத்தளவு குழந்தைக்கு அடங்கி போகாது. குழந்தையை தூங்க வைக்கும்.
ஆகவே இடையின ரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ
இதிலிம் சில தத்துவங்களை சொல்வது போல் பாடுகிறார்கள்.
ஆராரோ - நீ யாரோ, நான் யாரோ, இங்கு நாம் இருவரும் இணைந்திருக்கிறோம் என்று தாய் குழந்தையைப் பார்த்து சொல்கிறாளாம்
ஆரிராரோ - யாரை இழந்து யாரை பெறுவோம் என்று சொல்ல முடியாது என்கிறாள்.
ஆரீராரோ - யார் இருப்பார்கள் என்று தெரியாது, இருந்தும் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.