Saturday, September 29, 2012

கணவன் - மனைவி

வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று சொல்வதுண்டு.

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் முதலில் உடலால் இணைகின்றனர். உடல்கள் இணைந்து அதன் பசியாறியபின் அவர்களின் மனது இனைகிறது. இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஒரு மனசு இன்னொரு மனசோடு ஒத்துப் போக வாய்ப்பில்லை. அது முடியாது. இரண்டு மனசும் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு உணர்வு சார்ந்து வாழ்ந்தது. அது சேர்ந்து இருப்பது ரொம்ப கடினம்.

நிறைய கணவன் மனைவி தங்கள் வாழ்க்கையில் சண்டை போட்டதில்லை என்று சொல்வர். கண்டிப்பாக இது பொய். இவர்கள் இருவரும் பிரச்சனை வருகிற விசயங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. அதாவது தினமும் இருவரும் அதே தயிர்சாதம் சாப்பிடுவது போல.

அதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் சிறப்பாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி ?

மனைவியை அவரின் மனம், குணம், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட வேண்டும்.

அதுபோல் கணவனின் எண்ணம், குணத்தை அப்படியே மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.