Wednesday, September 26, 2012

கடவுளும் மதமும்


கடவுள் என்பதும், மதம் என்பதும் அவரவர் மனதின் நீண்ட கால பசியும் ருசியும்.

ஒருவன் காடுவழியாக சென்று கொண்டிருந்தான். எதிரில் அவன் நண்பனை பார்த்தான். அவனிடம் "நான் காடுவழியா வரும்போது சிவப்பு நிறத்தில் உடும்பு போல் ஒன்றைப் பார்த்தேன்" என்றான்.

அதற்கு நண்பன் "அட முட்டாளே!  நானும் பார்த்தேன். அது சிவப்பு இல்லடா. பச்சை நிறத்தில் செடி கொடிகளோடு ஊர்ந்து சென்றது" என்றான்.

இதைக் கேட்ட இன்னொருவன் "போங்கடா நீங்க ரெண்டு பேரு சொன்னதும் தப்பு. நீங்க பார்த்தது சிவப்பாகவும், பச்சையாகவும் மாறும் தன்மை கொண்ட பச்சோந்தி" என்றான்.

கடவுள் என்பது பச்சோந்தி மாதிரி. அவரவர் பார்வைக்கு ஏற்ப வித்தியாசமாக தெரியும். 

தென் இந்தியாவில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசி. ஆனால் வட இந்தியாவில் வாழும் மக்கள் கோதுமையை பிரதான உணவாக பயன்படுத்துகின்றனர்.

இதற்காக தென் இந்திய மக்கள் "கோதுமை எல்லாம் ஒர் உணவா? அத சாப்பிடுறவன் மனுசனா?" என்றால் எப்படி.

அதே போல் வட இந்தியர் "அரிசி சோறு எல்லாம் எப்படி சாப்பிடுறாங்க. உவ்வே. கேவலம்" என்றால் என்னாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் வளரும் போது எந்த உணவு உண்டு வாழ்ந்தானோ அதுவே அவனுக்கு அமிர்தமாக இருக்கிறது.

சிவனை வழிபடுபவன் மற்ற கடவுளை ஏற்பதில்லை. இதுபோல் எல்லோருமே அப்படித்தான். என்ன ருசியில், பசியில் வாழ்ந்தார்களோ அதுவே உன்னதம் என்கின்றனர்.

ஆக அவரவர் பசிக்கும் ருசிக்கும் வித்தியாப் படும் கடவுளும், மதமும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.