Saturday, September 29, 2012

Count Down

ஆர்தர் சார்லஸ் கிளார்க் என்பவர் இங்கிலாந்தில் 1917 ல் பிறந்து ஸ்ரீ லங்காவில் தன் வாழ்வை 2008 ல் நிறைவு செய்தவர்.

விண்வெளியில் ஏவிகின்ற ராக்கேட் பற்றி ஒரு நாவல் எழுதினார். அதில் எரிபொருள் நிரப்பி விண்ணில் ஏவும் நெரம் குறித்தவுடன் அதை அனுப்ப 10 லிருந்து 1 வரை எண்ணி வானில் செலுத்துவது போல் தனது கதையில் எழுதினார்.

அவரிடம் இதைப்பற்றி கேட்ட போது 1 லிருந்து 10 வரை எண்ணும் போது அதற்கு மேல் இலக்கங்கள் இருப்பதால் குழப்பம் ஏற்படும். ஆகவே 10 லிருந்து 1 வரை எண்ணி அதன் கீழ் எண்ணிக்கை இல்லாததால் குழப்பம் இல்லாமல் விண்ணில் செலுத்தலாம் என்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை நாம் இதை "count down" என்று பயன்படுத்துகிறோம்.

இவருக்கு "சர்" பட்டம் கொடுக்க இங்கிலாந்து முயன்ற போது சில சர்ச்சைகளில் சிக்கினார். இங்கிலாந்து நாட்டின் அரசியிடம் என்னைப் பற்றி விசாரணை அதன் பின் "சர்" பட்டம் கொடுங்கள் என்று துணிச்சலாக சொன்னவர்.

அவர் சொன்னதற்கேற்ப விசாரணையில் இவர் பற்றி நல்ல தீர்ப்பு வந்தவுடன் "சர்" பட்டம் வழங்கப்பட்டது.

பதவிப்பிரமாணம் - உறுதிமொழி


கடவுளை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் எடுத்து வந்த காலத்தில் சார்லஸ் பிராட்லா என்பவர்  முதன் முதலாக மனசாட்சியின் படி உறுதிமொழி எடுக்கும் உரிமையை பெற்றுத் தந்தவர்.

1833 ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் 1880 ல் பாராளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பதவிப்பிரமாணம் எடுக்கும் போது ஆண்டவன் பெயரால் உறுதிமொழி எடுக்க சொன்னபோது மறுத்தார். என் மனசாட்சியின் படிதான் உறுதிமொழி எடுப்பேன் என்று சொன்னபோது பாராளுமன்றத்திலிருந்து அவர் விலக்கப் பட்டார்.

1882 ல் திரும்பவும் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். அதே பிரச்சனை. இந்த முறை ஒரு விண்ணப்பம் தயார் செய்து மனசாட்சியின் படி பதவி ஏற்க 2 லட்சம் மக்களின் கையெழுத்து வாங்கி பாராளுமன்றத்தில் ஒப்படைத்தார். ஒத்துக் கொள்ளவில்லை.

1886 ல் மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இந்த முறை சபாநாயகர் மாறியதால் மனசாட்சியின் படி பதவி ஏற்க ஒத்துக் கொண்டார்.

இதனால் உலகம் முழுவதும் மனசாட்சியின் படி உறுதிமொழி எடுக்க வழிவகுத்தவர் சார்லஸ் பிராட்லா.

கணவன் - மனைவி

வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று சொல்வதுண்டு.

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் முதலில் உடலால் இணைகின்றனர். உடல்கள் இணைந்து அதன் பசியாறியபின் அவர்களின் மனது இனைகிறது. இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஒரு மனசு இன்னொரு மனசோடு ஒத்துப் போக வாய்ப்பில்லை. அது முடியாது. இரண்டு மனசும் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு உணர்வு சார்ந்து வாழ்ந்தது. அது சேர்ந்து இருப்பது ரொம்ப கடினம்.

நிறைய கணவன் மனைவி தங்கள் வாழ்க்கையில் சண்டை போட்டதில்லை என்று சொல்வர். கண்டிப்பாக இது பொய். இவர்கள் இருவரும் பிரச்சனை வருகிற விசயங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. அதாவது தினமும் இருவரும் அதே தயிர்சாதம் சாப்பிடுவது போல.

அதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் சிறப்பாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி ?

மனைவியை அவரின் மனம், குணம், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட வேண்டும்.

அதுபோல் கணவனின் எண்ணம், குணத்தை அப்படியே மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Friday, September 28, 2012

சூரசம்ஹாரம்


சூரபத்மனை வெல்வது ஆணவத்தை (நான் எனது என்னும் அகங்காரத்தை) அழிப்பதாகும்.

ஆனைமுகச்சூரனை முருகன் வெல்வது மாயையை ஒழிப்பதாகும்.

சிங்கமுகச் சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகும்.

ஆணவம், கன்மம், மாயை என்பது மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர் நிலையை அடையலாம். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப் படுகிறது.

Thursday, September 27, 2012

குழந்தைகள்


தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்தது மட்டுமில்லாமல் அவர்கள் கடைபிடிக்கும் சாதி மத எண்ணங்களையும் தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள்.

கோவிலுக்கு போ சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.

பெற்றோர்களே இன்றுவரை சாதி, மதம், கடவுளை சரியாக தழுவவில்லை. பெற்றோர்கள் உண்மையாகவே தழுவியிருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியதில்லை.

அவர்கள் பெற்றோர்களை பார்த்து தானாக கற்றுக் கொள்வார்கள்.மொழியை கற்றுக் கொள்கிறார்கள். பேச கற்றுக் கொள்கிறார்கள்.







ஆணவம், கன்மம், மாயை



"ஆணவம்", "நான்" இருக்கும் இடத்தில் ஆண்டவன் இருப்பதில்லை.

உன்னுள் நான், ஆணவம் சேர்ந்தால் மனிதன். அதை விடுத்தால் நீ தெய்வம்.



அவஜானந்தி மாம் முத்த மனுஷம் தனும் அஸ்ரிதம்;
பரம் பவம் அஜானந்தோ மமா பஹுதா மகேஸ்வரம்.

- கீதை


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
- திருமந்திரம்


விஞ்ஞானத் தோர்க்கா ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மந் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
- திருமந்திரம்


ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
- திருமந்திரம்


மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
- திருவாசகம்


சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
-திருமூலர்

எதனால் ஜெயிக்கிறார்கள் ?


உலகில் உள்ள மனிதர்கள் எதனால் ஜெயிக்கிறார்கள் ?

ஒரு எறும்பு தன் எடையை விட 8 மடங்கு அதிகம் உள்ள இனிப்பை தள்ளிக் கொண்டு போகும்.

ஒரு சில ரவுடி எறும்பு தன் எடையை விட 12 மடங்கு அதிகம் உள்ள இனிப்பை தள்ளிக் கொண்டு போகும்.

இங்கே எறும்பின் வெற்றியின் ரகசியம் அதன் பலமா, திறமையா இல்லை ஆர்வமா?

எறும்பின் அதீத ஆர்வம் இனிப்பின் மீது கொண்டதால் ஜெயித்தது.

ஒருவன் வெற்றியடைய மிகுந்த ஆர்வம் வேண்டும். எளிதில் திருப்தியடையாமல் இன்னும் இன்னும் என்ன செய்யலாம் என்று ஆர்வம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

Wednesday, September 26, 2012

கடவுளும் மதமும்


கடவுள் என்பதும், மதம் என்பதும் அவரவர் மனதின் நீண்ட கால பசியும் ருசியும்.

ஒருவன் காடுவழியாக சென்று கொண்டிருந்தான். எதிரில் அவன் நண்பனை பார்த்தான். அவனிடம் "நான் காடுவழியா வரும்போது சிவப்பு நிறத்தில் உடும்பு போல் ஒன்றைப் பார்த்தேன்" என்றான்.

அதற்கு நண்பன் "அட முட்டாளே!  நானும் பார்த்தேன். அது சிவப்பு இல்லடா. பச்சை நிறத்தில் செடி கொடிகளோடு ஊர்ந்து சென்றது" என்றான்.

இதைக் கேட்ட இன்னொருவன் "போங்கடா நீங்க ரெண்டு பேரு சொன்னதும் தப்பு. நீங்க பார்த்தது சிவப்பாகவும், பச்சையாகவும் மாறும் தன்மை கொண்ட பச்சோந்தி" என்றான்.

கடவுள் என்பது பச்சோந்தி மாதிரி. அவரவர் பார்வைக்கு ஏற்ப வித்தியாசமாக தெரியும். 

தென் இந்தியாவில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசி. ஆனால் வட இந்தியாவில் வாழும் மக்கள் கோதுமையை பிரதான உணவாக பயன்படுத்துகின்றனர்.

இதற்காக தென் இந்திய மக்கள் "கோதுமை எல்லாம் ஒர் உணவா? அத சாப்பிடுறவன் மனுசனா?" என்றால் எப்படி.

அதே போல் வட இந்தியர் "அரிசி சோறு எல்லாம் எப்படி சாப்பிடுறாங்க. உவ்வே. கேவலம்" என்றால் என்னாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் வளரும் போது எந்த உணவு உண்டு வாழ்ந்தானோ அதுவே அவனுக்கு அமிர்தமாக இருக்கிறது.

சிவனை வழிபடுபவன் மற்ற கடவுளை ஏற்பதில்லை. இதுபோல் எல்லோருமே அப்படித்தான். என்ன ருசியில், பசியில் வாழ்ந்தார்களோ அதுவே உன்னதம் என்கின்றனர்.

ஆக அவரவர் பசிக்கும் ருசிக்கும் வித்தியாப் படும் கடவுளும், மதமும்.

Thursday, September 13, 2012

குரு கோவிந்த் சிங் - சீடர்கள்

சீக்கிய மதத்தில் வந்த குரு கோவிந்த் சிங் தனது சீடர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஒர் நாள் தன் எதிரில் இருக்கும் அத்தனை சீடர்களையும் பார்த்து சொன்னார் "நான் ஒரு நரபலி கொடுத்து ஒரு காரியத்தை செய்ய வேண்டியிருக்கிறது. உங்களில் யார் அந்த நரபலிக்கு தயாராக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

முதலில் ஒரு சீடன் எழுந்து அவர் முன் வந்து நான் தயார் என்றான். அவனை உள்ளே அழைத்து சென்றார். வெளியே வரும்போது கையில் கத்தியும் அதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்து சொன்னார் "இன்னொரு நரபலியும் கொடுக்க வேண்டும் யார் வருகிறீர்கள்" எனக் கேட்டார். உடனே இன்னொரு சீடனும் எழுந்து வந்தான். இப்படி 5 சீடர்களையும் அவர் உள்ளே அழைத்து சென்றுவிட்டு வெளியே வரும்போது கத்தியோடு வந்தார்.

ஆனால் அவர் நரபலி கொடுத்தது ஒரு ஆடு. பின் அந்த 5 சீடர்களையும் பார்த்து சொன்னார் "உங்களையே பலிகொடுக்க நீங்கள் தயாராகிவிட்ட நீங்கள் தான் இந்த மதத்தை கொண்டு செல்ல சரியான சீடர்கள்".


பண்டாரம் - பரதேசி


செல்வங்களை சேர்த்து ஒரு அறையில் வைத்தால் அந்த இடத்திற்கு பெயர் பண்டாரம். கோவிலில் சாமியின் நகைகளை பாதுகாக்க எல்லாவற்றையும் ஒரு அறையில் வைத்திருப்பர். அந்த அறைக்கு பெயர் தான் பண்டாரம்.

பணத்தின் மேல், நகையின் மேல் ஆசையில்லாதவனைத் தான் அந்த அறைக்கு பாதுகாவலராக போடுவதுண்டு. அதுவே பண்டாரம் என்று கூப்பிடும் சொல்லாக மாறியது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவன் பெயர் பண்டாரம் என்றாகிவிட்டது. ஊர் ஊராக சுற்றுபவன் பெயர் பரதேசி.


Wednesday, September 12, 2012

வாழையடி வாழை

வாழையடி வாழை
ஒரு வாழைமரம் சேறும் சகதியும் இருக்கும் இடத்தில் தான் தள தள என்று வளரும்.

அதன் எல்லா பாகங்களும் நமக்கு பயன்படும்.

இலை : விரித்து சாப்பிட பயன்படும்
நடுத்தண்டு : சமைத்து உண்ணலாம்
வாழைப்பூ : சமைத்து உண்ணலாம்
பழம் : உணவாக பயன்படும்
இலைத்தண்டு : சுத்தம் செய்ய உதவும்

வாழைமரம் தானே பூத்து காய்த்து கொலைதள்ளி பழம் தந்து எல்லோருக்கும் பயன்பட்ட பின் அதன் அடியில் இருந்து அடுத்த வாழைமரம் உருவாகும்.

மற்ற மரங்கள் ஒரு சில கால நேரங்களில் தான் பூத்து, காய்த்து பழங்கள் கொடுக்கும்.

ஆனால் வாழைமரம் எல்லா நேரமும் ஒன்றன்பின் ஒன்றாக பூத்து, காய்த்து, பழம் தரும்.

ஒரு மரத்தின் அடிப்பகுதியை வெட்டி இன்னொரு இடத்தில் விதைத்தால் அது வளராது. ஆனால் வாழைமரம் அதன் அடிப்பகுதியில் இருந்து அடுத்த வாழை மரம் வளர வழி கொடுக்கும்.

இத்தனை சிறப்புமிக்க பயன்களை கொண்டுள்ளதால் தான் ஒரு குலம் தழைத்தோங்க "வாழையடி வாழையாக வாழ்" என்று வாழ்த்துகின்றனர்.

வாழ்க்கை

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கீதையில் சொன்னவன் கிருஷ்ணன். ஆனால் அதன்படி அவன் வாழவில்லை. அப்படி வாழ்ந்தவன் ராமன்.

திருமண வயது

ஒவ்வொரு திருமணத்தின் பொதும் ஆண்களை விட பெண்களின் வயது குறைவாக இருக்குமாறு பார்க்கின்றனர். இது ஏன் ?

பொதுவாக பயிர்கள் நன்றாக செழித்து வளர வேண்டுமெனில் இளமையான நிலத்தில் நல்ல முதிர்ந்த விதைகளை தூவ வேண்டும்.

இங்கே நிலம் பெண்ணாகவும், விதை ஆணாகவும் கருதப் படுகிறது.

Tuesday, September 11, 2012

யாருக்கு சொன்னது ?


திருக்குறள்  - மனிதன் மனிதனுக்கு சொன்னது.
திருவாசகம் - மனிதன் தெய்வத்திற்கு சொன்னது.
கீதை             - தெய்வம் மனிதனுக்கு சொன்னது.

Monday, September 10, 2012

Understanding Ramayanam and Mahabharatham

Understanding Ramayanam and Mahabharatham
Principles upheld
Principles not upheld
Rules followed
Raman
Duryodhana
Rules not followed
Krishan
Ravanan

Friday, September 7, 2012

நம்பிக்கை


நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்
1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.
நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்
1. ஜாதிப்பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்