ஆசையே துன்பத்திற்கு காரணம். அப்படி என்றால் அதே ஆசை தான் இன்பத்திற்கும் காரணம். இப்போ ஆசைப்படக்கூடாதா இல்லை ஆசைப்படலாமா ?
பெரிய கேள்வி இது. ஆனால் இதனுள் இருக்கும் கருத்தைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
எந்த துன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாற வாய்ப்புண்டு. அதே நேரத்தில் எந்த இன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாறும்.
சிக்கலான மகப்பேறு மனைவிக்கு ஏற்பட்டால் துன்பம், கஷ்டம் என்கிறோம். அதே விசயம் குழந்தை பிறந்து இருவரும் நலம் என்று வரும் போது இன்பமாக மாறுகிறது.
நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் இன்பத்தை நோக்கியே பயணிக்கிறோம். அதே செயலால் துன்பம் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும்.
புத்தன் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம், அது நம் எண்ணங்களில் இருந்து உருவாகிறது, இந்த எண்ணங்கள் நம் மனதின் வெளிப்பாடு, மனம் எப்போதும் எண்ணங்களை வைத்துக் கொண்டேயிருக்கும் என்று உணர்ந்தார். மனதைக் கட்டுப்படுத்தவது முடியாத காரியம். அதனால் அந்த மனதிலிருந்து விலகி இருங்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.