A bar opened in opposite a Church. The church prayed
daily against the bar business. After few days, the bar was struck by lighting
& caught fire. Bar owner sued the church authorities for the cause, as an
action by their prayer. But The Church denied all responsibility. So the Judge
commented, “It’s very difficult to decide the case because here we have a bar
owner who believes in the power of prayer & an entire Church that doesn’t
believe in it !!!”
ஒருத்தன் கார்ல ஏர்போர்ட் போனான்.
போற வழியில் வண்டி பிரச்சனை ஆகி டயர் கழண்டு விழுந்துருச்சு. உடனே கோபப்பட்டவன்
என்னென்னமோ சொல்லி திட்ட ஆரம்பிச்சுட்டான். கேட்ட வார்த்தை சொல்லி “கடவுளை”
திட்டுறான். அந்த வழியா வந்த ஒரு ஞானி/மத போதகர்/சாமியார் (எப்படி வேணும்னாலும்
வச்சுங்குங்க) அவனை பார்த்து ஏம்பா இப்படி திட்டற, “கடவுளை
பிரார்த்தனை பண்ணு, வேண்டி
விரும்பி கேளு, மனசில
நினைச்சு தியானம் பண்ணு” கண்டிப்பா உனக்கு உதவுவாறு”
அப்படின்னு சொன்னாரு.
அத கேட்டதும் திரும்ப திட்ட
ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ஞானியை பார்த்து “வேணும்னா நீ
பிரார்த்தனை பண்ணு, வேண்டி
விரும்பி கேளு, மனசில
நினைச்சு தியானம் பண்ணு” னு சொன்னான்.
ஞானிக்கு இப்ப தர்மசங்கடமான நிலைமை
பிரார்த்தனை பன்றதா வேண்டாமான்னு. கார்ல வந்தவன் நம்மள ஒருமாறி பார்ப்பானே, என்ன
செய்யனு யோசிச்சிட்டு கடைசில பிரார்த்தனை பண்ணாரு. “கடவுளே
டயர் கழண்டு விழுந்துடுச்சு, வண்டி
சரிபண்ணு” னு.
என்ன அதிசயம், கார்
டயர் தானா வந்து ஒட்டிகிச்சு, வண்டி
சரியாகிடுச்சு.
உடனே நம்ம ஞானி சொன்னாரு “கடவுளே
நிஜமாவே நீ இருக்கியா ?”
ஒரு வியாபாரி சென்னையிலிருந்து
மும்பைக்கு செல்ல வேண்டும். வியாபாரம் முடிஞ்சா சில பல கோடிகள் கிடைக்கும். அதனால்
டிரைவரிடம் “காலைல
ஆறு மணிக்கி கரக்டா வந்திடுன்னு, எட்டு மணிக்கு
பிளைட்”னு
சொல்லிட்டு தூங்க போயிட்டார்.
ஆனா டிரைவர் காலைல 6.30am
க்கு லேட்டா வந்தான். அவனை மனசுக்குள்ளே திட்டி தீர்த்துவிட்டு வண்டியில் ஏறினார்.
ஏர்போர்ட் போற வழியில் வண்டி பஞ்சர். இவருக்குனா செம கோபம். அதோட “என்னன்னு
பாரு“ னு
சொன்னாரு. டிரைவர் பார்த்துட்டு “சார் போன தடவை
வண்டி சர்விஸ் பார்த்தவன் ஸ்டெப்னி டயர் திரும்ப வைக்கல, ஸ்டெப்னி
மாத்த ஒரு மணி நேரம் ஆகும்”னு சொன்னான்.
இவருக்கு கோபம் உச்சிக்கு போச்சு. அந்த நேரம் பார்த்து இவரோட நண்பன் பைக்ல
வந்தான். இவற பார்த்து “என்ன
சார் நடுரோட்டுல நிக்கிறீங்க”னு கேட்டான். இவரு
ஏர்போர்ட் போகனும்பா வண்டி பஞ்சர்னு சொன்னாரு. “வாங்க
சார் நான் கொண்டுபோய் விடுறேன்”
சொல்லி அவர ஏத்திகிட்டு ஏர்போர்ட் போனான். நம்மாளு மனசுக்குள்ள “அப்பா,
கடவுள் மாதிரி நண்பன் வந்து நம்மள காப்பாத்திட்டான், நம்ம
டிரைவர் எமன் மாதிரி வந்து நடுரோட்டுல நிக்கவச்சு வியாபாரத்தை கெடுக்க
பார்த்தான்.”
ஏர்போர்ட் போய் சேர்ந்தாச்சு, நண்பருக்கு நன்றி சொல்லிட்டு உள்ள
போய் பார்த்தா என்ஜின் கோளாறு காரணமாக விமானம் ஒரு மணி நேரம் லேட். எப்படியோ
விமானத்துல ஏறியாச்சு. பாதிதூரம் போனதும் ஒரு அறிவிப்பு “என்ஜின் கோளாறு காரணமாக விமானம்
தரையிங்குவதில் பிரச்சனை”. நம்மாளு இப்ப “சே கடவுள் மாதிரி டிரைவர்
நம்மள நடுரோட்டுல தான் நிப்பட்டுன்னான். ஆனா இவன் எமன் மாதிரி ஏர்போர்ட்ல
இறக்கி விட்டு விமானத்துல ஏத்திவிட்டு சாவுக்கு வழிபன்னிட்டானே”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.