Wednesday, February 24, 2021

கற்பனையே

 கடலினைத் தாவும் குரவும்-வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த-திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

Tuesday, February 23, 2021

நம்மாழ்வார்

 அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை

அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர் 

அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

தாயுமானவர்

 வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்

விளங்கு பரம் பொருளே நின் விளையாட் டல்லால்

மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன

வாசிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா ?