Thursday, May 10, 2012

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்ற சொல்லிற்கு 109 பொருள்களை கழகத் தமிழ் அகராதி தருகிறது. இவற்றுள் குரு, தெய்வம், இறைவன், முனிவன், ஈசன், தேவன், மூவுலகாளி மற்றும் விமலன் என்ற பொருள்கள் குறிப்பிடத்தக்கவை.

கடவுள் எல்லாவற்றையும் கடந்த பொருள். அது ஒரு நிலைத்தன்மை.

கடவுள் உயிருமன்று, உலகபொருள்களில் எதுவுமன்று, உலகப் பொருள் போல் அழிவதன்று, காணப்படுவதன்று.

கடவுதல் என்றால் செலுத்துதல் என்னும் பொருள் உண்டு. எல்லா உலகத்தையும் உயிர்களையும் உள் நின்று செலுத்துவது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பொருளுக்கும் நமக்கும் தொடர்பு என்னவென்றால் அது நம்மை செலுத்துகின்றது, அறிவிக்கின்றது.


அப்படியானால் எல்லா மதத்தவரும் வழிபடும் கடவுள்கள் யார் ?

கடவுள் பற்றி பாரதியார்

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

- பாரதியார்.

வால்மீகி - கம்பன்

வால்மீகி ராமாயணத்தில் வரும் முனிவர் ஜாபாலி நாத்திகம் பேசுபவர்.

ஆனால் அந்த கதாபாத்திரம் கம்பராமாயணத்தில் இடம்பெறவில்லை.

கம்பனுடைய பக்திக் கொள்கைக்கு ஜாபாலியின் கொள்கை முரன்படுவதால் கம்பன் அதைப் பற்றி பாடமல் விட்டுவிட்டார்.