Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Monday, October 1, 2012

கடவுளின் காமலீலை - பிரம்மன்

ஏன் இந்து புராணங்களில் கடவுளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எல்லாமே கதைதான் என்பதாலா ?

1. பார்வதியாரின் திருமணத்தில் திருவிரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து பின் சிவபூசையால் நீங்கினவர்.

2. இவர் அசுவமேத யாகம் செய்யும் போது அங்கிருந்த தேவ பத்தினிகளைக் கண்டு வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் ஆகியோர் பிறந்தனர்.

3. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக் கண்டு மயங்கி அவளை அடைய விரும்பிய போது அவள் நான்கு திக்கிலும் ஓடினாள். அத்திக்கிகளில் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தவர். அதனால் நான்முகன் என பெயர் பெற்றார்.

4. இவர் கெளரி தேவியின் திருமணம் காணச் சென்றார். அங்கே அவரது அழகில் மயங்கி காமமேலீட்டால் துன்புற்றார்.

(ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 1135,1136)

Friday, September 7, 2012

நம்பிக்கை


நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்
1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.
நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்
1. ஜாதிப்பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்

Thursday, May 10, 2012

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்ற சொல்லிற்கு 109 பொருள்களை கழகத் தமிழ் அகராதி தருகிறது. இவற்றுள் குரு, தெய்வம், இறைவன், முனிவன், ஈசன், தேவன், மூவுலகாளி மற்றும் விமலன் என்ற பொருள்கள் குறிப்பிடத்தக்கவை.

கடவுள் எல்லாவற்றையும் கடந்த பொருள். அது ஒரு நிலைத்தன்மை.

கடவுள் உயிருமன்று, உலகபொருள்களில் எதுவுமன்று, உலகப் பொருள் போல் அழிவதன்று, காணப்படுவதன்று.

கடவுதல் என்றால் செலுத்துதல் என்னும் பொருள் உண்டு. எல்லா உலகத்தையும் உயிர்களையும் உள் நின்று செலுத்துவது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பொருளுக்கும் நமக்கும் தொடர்பு என்னவென்றால் அது நம்மை செலுத்துகின்றது, அறிவிக்கின்றது.


அப்படியானால் எல்லா மதத்தவரும் வழிபடும் கடவுள்கள் யார் ?

கடவுள் பற்றி பாரதியார்

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

- பாரதியார்.

Thursday, March 29, 2012

கடவுள் கிருஷ்ணர் இருக்கிறாரா ?


கடவுள் கிருஷ்ணர் இருக்கிறார், இருந்திருக்கிறார், இப்போதும் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இந்த வீடியோ பதிவை சான்றாக சொல்கிறார்கள் மெத்த படித்தவர்கள்.

Dwarka, Krishna's lost, or found, city

இன்னும் நிறைய வீடியோ பதிவையும் காணலாம்.

என் கேள்வி ?

இன்னும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறம் குணா என்பவன் கொடைக்கானலில் மலைக்குகையில் பிறந்து வளர்ந்தான் என்று சொல்லலாமா ?

ஏனென்றால்  "குணா கேவ்ஸ்" தான் அங்கு இருக்கிறதே !!!

இந்த வீடியோவை பார்த்த எத்தனை பேர் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டுள்ளனர் ?

இந்த வீடியோதான் கடவுள் இருந்ததற்கான சரியான அடையாளம் என்றால் எத்தனையோ வேற்று மதத்தினர் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்திருப்பார்கள். 

கண்டெடுத்தது கிருஷ்ணரின் உடல் பாகங்களா இல்லை ஒரு சமுதாயம் வாழ்ந்ததற்கான அடையாளங்களா ?